”அய்யோ சே சே நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன்”
”நீயா“
”ஆமாம் உங்க பேரன் இப்ப எங்க போயிருக்கார்ன்னு தெரியுமா, காவல்அதிகாரியை பார்க்க எப்படியும் அந்த அதிகாரி உங்களை விசாரிக்கனும்னு புறப்பட்டு வந்து கேள்வி கேட்டா அதுக்கு நீங்க ஒழுங்கா பதில் சொல்லனும்ல, நீங்க பாட்டுக்கு எல்லா கேள்விக்கும் தெரியாது தெரியாதுன்னு சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க, உங்க கையில விலங்கு மாட்டி கைது செய்து தெருதெருவா மேலவீதி கீழவீதி பார்க்கும்படி கூட்டிட்டுப் போவாங்க பரவாயில்லையா” என சொல்ல அதிர்ந்துப் போனார் சங்கமேஸ்வரன்
”அதிர்ச்சியாகாதீங்க ஏற்கனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கு, இன்னும் அதிகமாயிடப் போகுது”
”இப்ப என்னதான் வேணும் உனக்கு”
”காவல் அதிகாரிகள் கேட்கற கேள்விகளை நான் கேட்கறேன், அதுக்கு நீங்க சொல்ற பதில வைச்சி நீங்க கைதாவீங்களா இல்லை தப்பிப்பீங்களான்னு நான் முடிவு சொல்றேன், எப்படி என் திட்டம்”
”என்னவோ செய்”
”சரி முதல் கேள்வி எத்தனை வருஷமா இந்த வீட்ல நீங்க இருக்கீங்க”
”ரொம்ப வருஷமா”
”ம் அதுக்கு முன்னாடி நீங்க எங்க இருந்தீங்க“
”ப்ச் இது ஒரு கேள்வியா”