”இதுவரைக்கும் கீழவீதி மேலவீதின்னு பிரிஞ்சிருக்கற இந்த ஊரு ஒண்ணாகனும், மக்கள் மத்தியில ஏற்ற தாழ்வு பிரிவினை எதுவும் வரக்கூடாது, அதுக்கு என்ன செய்யனும்னு சொல்லுங்க நான் செய்றேன்” என்றாள் அதைக் கேட்ட மக்கள் திகைத்து தங்களுக்குள் காரசாரமாக பேசிக் கொண்டார்கள்.
”இந்த ஊரை ஒண்ணாக்கி என்ன சதித்திட்டம் தீட்டப்போற” என கார்கோடகன் கேட்க நாச்சியாவிற்கு வந்ததே கோபம் பளார் என அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அதில் மேலவீதியாட்கள் மட்டுமில்லை கீழவீதியாட்களும் பொங்கினார்கள், கோபத்தில் அதைக்கண்ட நாச்சியா கைதட்டினாள்
”பரவாயில்லை இரண்டு பக்கமும் ஒண்ணாயிட்டீங்களே இதுக்காகத்தான் நான் பாடுபட்டேன், நான் பட்ட பாடு வீண் போகலை, இப்படியே நீங்க ஒத்துமையா இருக்கனும், அதுக்கு நான் என்ன செய்யனுமோ அதை செய்றேன், அதுக்காக என் கணவர் தன்னோட சொத்தை கூட இந்த ஊருக்காக செலவு செய்ய காத்திருக்காரு என்ன ஒரே நிபந்தனை மட்டும் விதிச்சாரு, அது என்னன்னா இந்த ஊர் ஒண்ணா இருந்தா மட்டும்தான் நான் எல்லாருக்கும் உதவி செய்வேன்னு சொன்னாரு” என சொல்ல மக்கள் சற்று அமைதியானார்கள்.
கார்கோடகனின் தந்திர பேச்சு மக்கள் மத்தியில் எடுபடவில்லை
”அட இருப்பா நீ வேற, எப்பபாரு எங்களுக்குள்ள பிரிவினை பத்தியே பேசற இப்ப நாம தனித்தனியா வாழ்ந்து என்னத்த கண்டோம், ஏதோ ஒண்ணா வாழ்ந்தா நல்லது நடக்கும்னா எல்லாரும் ஒண்ணா இருக்கலாமே, என்ன தப்புங்கறேன்” என ஒரு பெரியவர் சொல்ல அதை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள்
”அதுக்காக நாம என்ன, நம்ம தகுதி என்ன, அதை மறந்துட்டு கீழவீதியாட்களோட எப்படி ஒண்ணாயிருக்கறது இது நல்லாவாயிருக்கு” என கார்கோடகன் பேச அதற்கு மேலவீதியாட்களோ
”ஆமா என்னத்த பெரிய தகுதி சின்னய்யா வந்த உடனே எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க