”என்னை இளங்கோவா நினைச்சிக்க, இளங்கோ இருக்கற இடத்தில என்னை வைச்சிப்பாரு முதல்ல கஷ்டமாயிருக்கும், போக போக பழகிடும், அப்புறம் உனக்கே என்னை பிடிச்சிப் போயிடும் நீயா எப்போ என்னை ஏத்துக்கறியோ அதுவரைக்கும் என் நிழல் கூட உன் மேல விழாது, உன்கிட்ட நான் ஜென்டிலா நடந்துக்குவேன் நம்பு”
”இளங்கோ இடத்தில நீயிருப்பியா, நான் உன்னை இளங்கோவா பார்க்கனுமா இது சாத்தியமா“
”நீ மனசு வைச்சா எல்லாமே சாத்தியம்தான்”
”எனக்கு தலையே பாரமா இருக்கு”
“வா உன்னை உன் ப்ளாட்ல விட்டுடறேன், அப்புறம் இங்க நடந்ததை வெளிய காட்டிக்காத, அவன் மேல எந்த புகாரும் சொல்லிடாத, வீணா உனக்குத்தான் அவமானம் வரும், அவனுக்கென்ன இங்க வேலை செய்ய பிடிக்காம வேற கம்பெனிக்கு போகப்போறான் போறப்ப இப்படி சேட்டை செய்துட்டு போறான், அவனை நினைச்சி கலங்காத, நான் நல்லா அவனை சாத்திட்டு வந்துட்டேன் இனி அவன் உன் நிழலை கூட தொடமாட்டான் சரியா” என சொல்ல அவளும் சரியென தலையாட்ட அவளை அழைத்துக் கொண்டு அவளது காரில் ஏறி ப்ளாட்டுக்குச் சென்று அவளை அவளது படுக்கையறையில் உட்கார வைத்தான். அந்த அறையை சுற்றி முற்றிப் பார்த்தான், இளங்கோவின் போட்டோக்கள் ஏகத்துக்கும் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது அதைக்கண்டு முகம் சுளித்தவன்
”ஹரிணியோட கல்யாணம் மட்டும் முடியட்டும், அதுக்கு அப்புறம் இந்த போட்டோக்களை எடுத்துட்டு என் போட்டோக்களை வைக்கிறேன் சே இவனை பார்க்க பார்க்க வெறுப்பா இருக்கு, எவ்ளோ அழகா இருக்கான், என்னை விட நீட்டா இருக்கான், எந்தப் பொண்ணு இவனைப் பார்த்தாலும் சொக்கிடுவா, அதனாலதான் ஹரிணியும் இவனை கல்யாணம் செய்துக்கிட்டா என் அதிர்ஷ்டம் இளங்கோ உயிரோட இல்லை ஹரிணியோட துரதிர்ஷ்டம் நான் அவளுக்கு கணவனா வரப்போறேன் என்ன ஆனாலும் நிவேதினி, பவானி போல ஹரிணி இல்லை இவள் ரொம்ப ஸ்பெஷல், வாழ்ந்தா இவள்கூட வாழனும்ங்கற எண்ணத்தை எனக்குள்ள கொண்டு வந்தவளை கண்ணுக்குள்ள வைச்சி பார்த்துக்கப் போறேன், இனி இதுதான் என் வாழ்க்கை” என