”ஓகே தருண்“
”அப்புறம் நான் பாட்டுக்கு வீட்டை விட்டு வந்துட்டேன்
, கல்யாண செலவுக்கு என்கிட்ட சுத்தமா பணம் இல்லை, இருந்த பணத்தில லண்டனை சுத்திப்பார்க்கறது உனக்கு துணி எடுக்கறதுன்னு தீர்ந்துப் போச்சி அதனால” என அவன் இழுக்க ஹரிணி சிறிதும் யோசிக்கவில்லை தனது டெபிட் கார்டை அவனிடம் தந்தாள்
”இதுல 10 லட்சம் இருக்கு நான் பெரிசா செலவு செய்யல, நீ இதை யூஸ் பண்ணிக்கோ தருண்”
என சொல்ல உடனே அந்த கார்டை வாங்கி மென்மையாகச் சிரித்தவன்
”நான் எல்லாம் பார்த்துக்கிறேன் நீ வேலைக்கு கிளம்பு நேரமாகுது பாரு” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு ரெடியாகி வேலைக்கு கிளம்பினாள்.
அவள் சென்றதும் அந்த டெபிட் கார்டையே இளப்பமாகப் பார்த்தான்
”ஒரு டெபிட் கார்டுல 10 லட்சம் ம்ம் பணத்தை சேர்க்க மட்டும்தான் அவளுக்குத் தெரியுது, அதை அனுபவிக்க தெரியலை, அதுக்குதான் நாம இருக்கோமே 10 லட்சத்தை பத்தே மாசத்தில சே சே ஐஞ்சே மாசத்தில செலவு செய்துடறேன், என்னை யார் கேள்வி கேட்பா அவளாலயும் கேள்வி கேட்க முடியாது, அப்படியே கேட்டாலும் உனக்காகதான் உனக்காகதான்னு பாவமா நின்னு ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டா ஹரிணி கண்டிப்பா கரைஞ்சிடுவா சூப்பர் என்ன வாழ்க்கைடா இது, அரண்மனை வாழ்க்கை இல்லைன்னாலும் ராஜா போல கால் மேல கால்போட்டுக்கிட்டு சந்தோஷமா வாழலாம்” என சொல்லிக் கொண்டே ஒவ்வொரு இடமாக பார்வையிடலானான். அதிகமாக இளங்கோவின் போட்டோ இருக்கவும் ஒரு போட்டோவை எடுத்து பார்த்து
”நீ செத்துகூட என்னை நிம்மதியா வாழ விடமாட்டியா, அதெப்படிடா உனக்கு மட்டும் எல்லா நல்லதும் நடக்குது, படிக்கற காலத்திலயும் நீதான் டாப்ல இருந்த, வேலையிலயும் நீதான் டாப்ல இருந்த, நான் ஆசைப்பட்ட நிவேதினியையும் உனக்கே கல்யாணம் பண்ணிவைக்கப்