(Reading time: 8 - 16 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

டைம் வேஸ்ட் செய்துட்டு இருக்கீங்க!"

  

"எதனால அப்படி சொல்றீங்க சக்தி???"

  

"எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லை. நான் இப்படி ஒரு ரிமோட் வில்லேஜ்ல தனியா இருக்கேன்னா அதுக்கு காரணம் என்னோட அம்மா, அப்பா. எனக்கு எல்லோரும் இருக்காங்க, ஆனா யாரும் இல்லை. என் அம்மா அப்பா கல்யாணம் நடந்தே இருக்க கூடாது. தப்பான ஒரு ஈவன்ட் அது. அதனால அவங்க இரண்டு பேரும் இம்பாக்ட் ஆனாங்களோ இல்லையோ, நான் ஆகி இருக்கேன். கல்யாணம் இதெல்லாம் எனக்கு செட் ஆகாது SD!"

  

சக்தியின் பெற்றோர் அவள் குழந்தையாக இருந்தப் போதே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதற்கு பிறகு தாத்தா பாட்டி வீடு, ஹாஸ்டல் வாழ்க்கை என்று வளர்ந்தவள் சக்தி. இதைப் பற்றி அவளே சாந்ததுரையிடம் ஏற்கனவே சொல்லி இருந்தாள். அதனால சாந்ததுரை மேலும் கேள்விகள் கேட்டு அவளை தொல்லை செய்யவில்லை.

  

மாறாக, "சரி நாம கல்யாணம் செய்துக்க வேண்டாம். லெட்ஸ் லிவ் டுகெதர்," என்றான் இலகுவாக!

  

சக்தி சாந்ததுரைக்கு முறை முறை என்று ஒரு முறைப்பைக் கொடுத்து விட்டு திரும்பி ஜாக் செய்ய தொடங்கினாள்.

  

"நானும் வீட்டுக்கு தான் போறேன். கார்ல வாங்க சக்தி!" சாந்ததுரை சொன்னது காதில் விழுந்தாலும் கேட்காததுப் போல வேகத்தை அதிகரித்தாள் சக்தி.

  

🌼🌸❀✿🌷

   

த்யா ஆவி பறக்கும் டீயை சக்தியின் முன் வைத்தாள். அந்த டீக்கு போட்டியாக சக்தியின் கண்களும் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.

   

"இப்போ உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம்? மேலோட்டமா பார்த்தா நீங்க இரண்டு பேரும் ஆல்ரெடி லிவிங் டுகெதர் தான். ஒரே வீட்டுல தானே இருக்கீங்க," என்றாள் சத்யா மெல்லிய

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.