கேலி இழையோட!
"ஆனா வேற, வேற ரூம்ல இருக்கோம். அதையும் சேர்த்து சொல்லு," என்றாள் சக்தி கடுப்புடன்!
"என்னால போலி டாக்டரை தப்பா சொல்ல முடியலை சக்தி. கல்யாணம் செய்துக்கோன்னு கேட்டார். நீ அவரைப் பிடிக்கலைன்னு சொல்லலை. கல்யாணம் பிடிக்காதுன்னு சொன்ன. அதனால அவர் இப்படி கேட்டார். அதுக்கும் நீ கோபப் படுற. பாவம் அவர் வேற என்ன செய்வார்?"
"கடுப்பேத்தாதே சத்யா. இந்த டாபிக்கை விடு. வேற எதையாவது பேசுவோம். இந்த S&S ப்ரைவேட் இன்வெஸ்டிகேட்டர்ஸ் திறந்து இப்படி ஈ ஓட்டுறதுக்கு உருப்படியா வேற ஏதாவது செய்யலாம்!"
"ஸ்டார்டிங் எப்போவும் ஃபர்ஸ்ட் கியர்ல இப்படி ஸ்லோவா தான் இருக்கும் சக்தி. அதுக்கு அப்புறம் பாரு பிக்கப்பை!"
"நல்லா பேசுற சத்யா. பேசாம நீ மேடைப் பேச்சாளரா போகலாம்."
"எழுதக் கூட செயலாம். நீ போலீசா இருந்தப்போ சால்வ் செய்த கேஸ் பத்தி எல்லாம் சொல்லு. ஷெர்லக் ஹோம்ஸ்க்கு வாட்சன் மாதிரி, ஹெர்க்யூல் பாய்ரோ’க்கு ஹேஸ்டிங்ஸ் மாதிரி உனக்கு நான். எல்லாத்தையும் எழுதுறேன்!"
"என்ன பாஸ் இப்படி திடீர்னு நீங்க சைட் கிக் ன்னு சொல்லிட்டீங்க?"
"சக்திக்கு ரொம்ப தைரியம் வந்திருச்சு! என்னை சைட் கிக்’ன்னு எல்லாம் சொல்ற?? நான் தான் எப்போவும் பாஸ். ஞாபகம் இருக்கட்டும்."
"அதானே. நான் ஏன் மறக்கிறேன்?!! ஆமா, உன் வீட்டு பாஸ் எப்படி இருக்கார்?"
"தலையை பிச்சுட்டு இருக்கார். அன்னைக்கு யாரோ துப்பாக்கியால காட்டுல சுட்டாங்கன்னு