(Reading time: 8 - 16 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

சொன்னாரே அதே மாதிரி நேத்து இன்னுமொரு இன்சிடன்ட். இந்த தடவை கத்தி பறந்து வந்துச்சாம்!"

  

"ஓ!"

  

"இப்போவும் யாருக்கு எதுவும் ஆகலையாம். நீ மார்னிங் ஜாகிங் போவீயே அந்த ரோட் நல்லா இல்லாத பக்கம், அங்கே தான் இது நடந்திருக்கு!"

  

"அப்படியா?" எதனாலோ காலையில் அதே பகுதியில் பார்த்த வினாயக்கின் ஞாபகம் சக்திக்கு வந்துப் போனது.

  

அந்த நேரம் கதவை திறந்து உள்ளே வந்தாள் ஒரு இளம்பெண். வெளீர் மஞ்சள் சுரிதாரில் இருந்தவள் ஐந்தரை அடி உயரம் இருக்கலாம், ஆனால் ஹீல்ஸ் அணிந்திருந்ததால் ஆறடி உயரத்தில் தெரிந்தாள்! எதுவும் பேசாமலே சக்தி, சத்யா இருவரின் நேர் எதிரே வந்து நின்றாள் அவள். அவளின் முகத்தில் இருந்த வேர்வை துளிகளும், விழிகளில் தெரிந்த கலக்கமும் ஏதோ டென்ஷனில் அவள் இருப்பதை சொன்னது!

  

"ஹாய் என் பேர் ப்ரியம்வதா. ப்ரைவேட் இன்வெஸ்டிகேட்டர்ஸ்ன்னு போர்ட் இருந்துச்சு. நான் அவரை உடனே பார்த்தாகனும். எனக்கு உடனடியா ஒரு ப்ரைவேட் இன்வெஸ்ட்டிகேட்டர் ஹெல்ப் வேணும்!" பேசிய போது அவளின் குரலிலும் பரபரப்பு அதிகமாக இருந்தது.

  

சக்தியும் சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

  

"ப்ளீஸ், எனக்கு டைமில்லை. இங்கே இன்வெஸ்ட்டிகேட்டர் ரூம் எதுன்னு சொல்லுங்க. நான் உடனே அவரை பார்த்து பேசனும்," என மீண்டும் சொன்னாள் ப்ரியம்வதா

  

"நான் சத்யா. இவ சக்தி. நாங்க தான் நீங்க பார்க்க வந்த இன்வெஸ்ட்டிகேட்டர்ஸ். சொல்லுங்க உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்?" சத்யா மென்மையான குரலில் ப்ரியம்வதாவை அமைதிப் படுத்த விரும்புபவளைப் போல கனிவுடன் கேட்டாள்.

  

ப்ரியம்வதா முகத்தில் திகைப்பு வந்தது. சத்யா சொன்ன பதிலை அவள்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.