“நான் அவங்களை போல இருக்கேன், ஒரே உருவம், ஒரே முகச்சாயல், ஒரே பெயர் அப்படின்னா அந்த ஆண்டாள் நாச்சியார் கூட என்னை போல இருப்பாங்கன்னு நினைக்கிறேன்”
”அது மட்டும் உறுதியானா நீ அநாதையில்லை இந்த பாழடைஞ்ச வீட்டோட மகாராணி இந்த வீட்டோட வாரிசு நீதான்”
“அப்ப நீ கூடதான் அகத்தியன் போல இருக்க, அப்ப நீயும் இந்த வீட்டு பையனா“
”அதுக்கு வாய்ப்பில்லை”
”ஏன்“
”அங்க பாரு பொன்முடி“
“யாரு”
”அதான் அகத்தியனோட அப்பா குடும்ப போட்டோ இருக்குப் பாரு அந்தாளு என்னைப் போல இல்லை“
“சொல்லப்போனா அகத்தியன், அந்தாளோட பிள்ளையே இல்லையே எப்படி சாயல் வரும்“
”வாஸ்தவம்தான் அப்ப உண்மையான அகத்தியனோட அப்பாவை பார்க்கனும்“
”அவங்கள்லாம் இருக்காங்களோ இல்லையோ”
”ஷ்ஷ் எந்த பக்கம் போனாலும் வழி கிடைக்க மாட்டேங்குது என்ன செய்றது இப்ப”
”தெரியலையே பசிக்குது வேற”
”அப்ப வா முதல்ல சாப்பிடலாம், அப்புறம் ஆசிரமத்துக்கு போய் விசாரிக்கலாம் இங்கிருந்தா