(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

நீ என் கூட வாழப்போற இந்த வாழ்க்கை அவள் உனக்கு தந்த பிச்சை, அவள் இறந்திருக்கலாம் ஆனா, என்னை பொறுத்தவரைக்கும் அவள் இன்னும் உயிரோடதான் இருக்கா நம்மளை சுத்திதான் இருக்கா, நாம சந்தோஷமா இருந்தா அவளும் சந்தோஷமா இருப்பா, அவளோட ஆத்மா சாந்தியாகட்டும் விழுந்து கும்பிடு, அவள் என் காதலியா என் மனைவியா வாழ்ந்தவ இனி அவள் இடத்தில நீதானே இருக்கனும், அதனால அவளை உன் அக்காவா நினைச்சி கும்பிடு அவளோட ஆசிர்வாதம் அவசியம் உனக்கு தேவை” என சொல்ல பவானிக்கு கொடுமையாக இருந்தது. ஆயினும் விழுந்து வணங்கினாள்.

  

இப்போது நிகழ் உலகில் ஹரிணியுடன் இணைந்து இளங்கோவின் போட்டோவின் முன் விழுந்து எழுந்து நின்றான் தருண்.

  

”தருண் இளங்கோ என்னோட காதல் கணவன் ஆனாலும் உனக்கு அவர் யாரு அண்ணன் முறையாகனும்”

  

”என்னது அண்ணனா“

  

”ஏன் கத்தறீங்க தருண், நான் என்ன இல்லாததையா சொன்னேன் நியாயமா பார்த்தா இந்த கல்யாணம் இப்படி நல்லவிதமா நடந்ததுக்கு முழுக்காரணமே இளங்கோதான், அவரோட ஆசிர்வாதத்திலதான் இந்த கல்யாணம் நடந்தது. அவரை என்னால மறக்க முடியாது அவர் இடத்தில நீ இருப்பேன்னு சொன்னதாலேயே இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். அதை நீ மறந்துடாத தருண்”

  

“சே சே நான் எதையும் மறக்கலை ஆனாலும் ஹரிணி நான் எப்படி இளங்கோவை அண்ணனா நினைக்கறது”

  

”எனக்காக தருண் ப்ளீஸ்” என சொல்ல அவனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை, இளங்கோவை கொன்றதே அவன்தானே, அவனே எப்படி தன் அண்ணனாக அவனை பாவிப்பான் ஆயினும் ஹரிணிக்காக சம்மதித்தான்

  

”சரி ஹரிணி உனக்காக நான் இளங்கோவை அண்ணனா நினைக்கிறேன், அடுத்தென்ன செய்யனும் பால்பழம் சாப்பிடற சடங்கு இருக்கே போலாமா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.