செய்தான், அவன் செய்வதை வேடிக்கைப் பார்த்தாள் ஹரிணி. அனைத்தும் முடித்து அவளிடம் வந்தான்
”எல்லாம் ரெடி வா ஹரிணி” என அழைக்க அவளும் வந்தாள்.
ஒரு தட்டில் பழம் நறுக்கி வைக்கப்பட்டிருந்தது, இன்னொரு டம்ளரில் பால் இருந்தது. அதை பார்த்ததும் ஆர்வமானான் தருண் அவளோ தேம்பி தேம்பி அழுதாள்
”என்னாச்சி ஹரிணி என்னாச்சி”
”இளங்கோ இளங்கோ” என சொல்லியபடி அழ அவனுக்கு வெறுப்பாகிப் போனது சே இதுக்கு நாம இதை செய்யாமலே இருந்திருக்கலாம் என மனதில் நினைத்தவன் அவளிடம்
”வேணாம்னா விடு இதுக்காக நீ அழ வேணாம் ஹரிணி”
”இல்லை உனக்காக செய்றேன்” என அழுதபடியே பால் டம்ளர் எடுத்தாள்
”முதல்ல நான்தானே”
”ப்ச் என்ன தருண் நமக்குள்ள எதுக்கு ஏற்றத்தாழ்வு”
”அப்படியில்லை முதல்ல மாப்பிள்ளைதானே பால் குடிக்கனும், அதுதானே சம்பிரதாயம்”
”நாம ஏன் அந்த சம்பிரதாயத்துக்குள்ள சிக்கிக்கனும் வேணாமே நான் முதல்ல குடிச்சா என்ன நீங்க குடிச்சா என்ன எல்லாம் ஒண்ணுதான் குடிங்க” என அவள் சொல்லி பாலை குடித்துவிட்டு மீதி பாலை தர அவனுக்கு முகம் கருத்துவிட்டது, அவளின் எச்சி பாலை குடிக்க மனம் ஒப்பவில்லை ஆனாலும் வேறு வழியில்லாமல் குடித்து தொலைத்தான், அடுத்து பழத்தையும் அவளே முதலில் உண்டு அவனிடம் தர அவனும் அதை உண்டான், அதைக்கண்டு அவள் வேண்டுமென்றே கண்கள் கலங்கி
”இளங்கோ இந்த சடங்கு செய்றப்ப எவ்ளோ கலாட்டா செய்தான் தெரியுமா தருண், அவன்