கைவிடமாட்டேன், இருந்தாலும் பெரியவங்க சொந்தங்க ஆசிர்வாதத்துக்கு முன்னாடி முக்கியமான ஒருத்தவங்களோட ஆசிர்வாதம் உனக்கு கிடைக்கனும் அப்பதான் நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும்”
”அது யாருங்க ரொம்ப முக்கியமானவங்களா”
”ஆமாம் என் உசுரே அவங்கதான் வா” என பவானியை அழைத்துக் கொண்டு நிவேதினியின் போட்டோ முன் நிப்பாட்ட பவானிக்கு இதயமே நொருங்கியது
”நிவேதினி பாரு என் மேல கோபமா உனக்கு, என்ன செய்றது எனக்கும் இந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்லைதான் ஆனா, வேற வழியில்லை ப்ளீஸ் என்னை மன்னிச்சி இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டு எங்களை ஆசிர்வாதம் செய்” என கைகூப்பி நிற்க பவானியின் கண்கள் கலங்கியது. அவளும் கைகூப்பி வணங்கினாள்.
என்னதான் தருணை தன் கணவனாக நினைத்தாலும் நிவேதினியையும் அவர்களது காதலையும் அவளால் ஏற்க இயலவில்லை, திருமணம் ஆனதும் அனைத்தும் மாறிவிடும் என நினைத்தவளுக்கு கிடைத்த முதல் ஏமாற்றம் இது, ஆனாலும் அவனுக்காக இந்த காரியத்தை செய்யலானாள்.
பொம்மை போல கைகூப்பி நிவேதினியின் முன் நின்றாள்.
”நீங்களும் தருணும் எந்தளவுக்கு காதலிச்சீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, அதே போல காதலை தருண் எனக்கும் தரணும்னு நான் கேட்டுக்கறேன், எங்க கல்யாணத்தால நீங்க சந்தோஷப்பட்டீங்கன்னா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க, அப்பவாவது உங்களோட ஆத்மா சாந்தியாகட்டும்” என சொல்ல அதைக்கேட்ட தருணோ
”கண்டிப்பா அவளோ ஆத்மா சாந்தியாகும் விழுந்து கும்பிடு ஆசிர்வாதம் வாங்கிக்க”
”விழுந்து கும்பிடவா”
”ஆமாம் நிவேதினி யாரோ கிடையாது உனக்கு அக்கா முறையாகனும், அவளோட தங்கையா