(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அண்ணா வேணாம்னா நீங்க ஆசைபட்டா போதுமா அங்கயும் தோனனுமில்லை

  

அப்ப அவளுக்கு என்னை பிடிக்காதுங்கறியா

  

ஆக உங்களுக்கு அவளை பிடிச்சிருக்கு

  

அப்படியெல்லாம் இல்லை

  

அண்ணா ஒத்துக்குங்கண்ணா

  

என்ன ஒத்துக்கனும் அதான் எதுவுமில்லைன்னு சொல்றேனே புரியல உனக்குஎன கோபமாக கத்திவிட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

  

”அண்ணாவுக்கு நந்தினி மேல காதல் வந்துடுச்சி ஆனா இல்லைன்னு கத்தறாரு, பொய் சொல்றாரு, அப்ப நந்தினிக்கு அண்ணன் மேல என்ன ஃபீலிங் இருக்குன்னு எப்படி தெரிஞ்சிக்கறது, கேட்டா தப்பா நினைப்பா, என்ன செய்யலாம் சரி பார்க்கலாம்” என நினைத்துக்கொண்டே டிபன் வாங்கிவர கடைக்கு சென்றான் அர்ஜூன். அவன் சென்று சிறிது நேரம் கழித்து வந்தால் வீட்டின் ஹாலில் வெண்ணிலா அமர்ந்திருந்தாள்.

  

நீயா நீ எதுக்கு இங்க வந்த

  

அதை உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை ரிஷி எங்க

  

அதை உன்கிட்ட சொல்லனும்னு எனக்கும் அவசியமில்லை கிளம்பு இங்கிருந்து

  

ஏய் என்ன திமிரா நான் யார்னு தெரியும்ல

  

யாரு ஓ ஓ அந்த மாணிக்கவேல் பொண்ணுதானே நீ அவ்ளோதானே

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.