”ரிஷி யாரோ ஒரு பொண்ணு முன்னாடி என்னை அவமானப்படுத்தாத”
”யாரோ ஒரு பொண்ணா அவள் நந்தினி”
”அதான் அவள் யாரு உங்களுக்கு அவள் என்ன உறவு சொல்லுங்க”
அந்த கேள்விக்குதான் யாரிடமும் பதிலில்லை சிறிது நேரம் மௌத்திற்கு பின் நந்தினியே பேசினாள்
”மன்னிச்சிடுங்க நான் இங்க வந்தது எதுக்குன்னா” என அவள் பேசி முடிக்கும் முன்பே ரிஷி குறுக்கிட்டான்
”நந்தினி கண்டவங்ககிட்ட பதில் சொல்லனும்னு ஒண்ணும் அவசியமில்லை நீ உன் ரூமுக்கு போ” என அவன் கத்தவும் அவளும் அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள். வெண்ணிலாவிற்கோ அவமானமாகிவிட்டது
”என்ன ரிஷி என்னை பார்த்து கண்டவங்கன்னு சொல்றீங்க” என கேட்கவும்
”எங்க அண்ணனுக்கு பொய் சொல்ல வராது” என்றான் அர்ஜூன் அவனை முறைத்துவிட்டு ரிஷியிடம்
”ரிஷி இன்னிக்கு நீங்க என்னை அவமானப்படுத்திட்டீங்க இதுக்கு நான் உங்களை என்ன செய்றேன்னு பாருங்க” என கோபமாக கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் அர்ஜூன் ரிஷியிடம்
”அண்ணா எனக்கு என்னவோ இந்த ரெண்டு பொண்ணுங்களால உங்க வாழ்க்கையில சுனாமி வரும்னு தோணுது”