”என்னது 3 நாச்சியாவா“
”ஆமாம்”
”இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு, விளையாடாத அகத்தியா”
”உண்மையை சொல்றேன் நாச்சியா இப்ப 3 பேராயிட்டா, எனக்கும் 100 பேரோட கதறல் சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு” என்றான் அவனின் போக்கைக் கண்டு நொந்துப் போன கமிஷனர்
”கேஸ்க்குள்ள இவ்ளோ டீப்பாவா போவீங்க ரிலாக்ஸா, கேஸ் விசாரிங்க” என சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.
உடனே இளம் வயது நாச்சியா வந்தாள்
”சார் வாங்க வணக்கம்” என கைகூப்பி நின்றாள் அவளின் புதிய தோற்றம் அவரை ஆச்சர்யப்படுத்தியது
”என்னம்மா இது நீயா இப்படி அலங்காரம் செய்துக்கிட்டு வந்திருக்க, இன்னிக்கு என்ன விசேஷம் வெளிய கோயிலுக்கு போறீங்களா இல்லை ஏதாவது பங்கஷனுக்கு போறீங்களா”
”அப்படியெல்லாம் இல்லைங்க சார், சரி காபி சாப்பிடறீங்களா டீ சாப்பிடறீங்களா” என கேட்க
”காபியே கொடும்மா ஆமா அகத்தியனுக்கு என்னாச்சி பித்துபிடிச்சவன் போல இருக்கானே”
”அதெல்லாம் ஒண்ணுமில்லை, அவர் நல்லாதான் இருக்காரு” என சொல்லிவிட்டு அகத்தியனைப் பார்க்க அவனோ அரண்டான் அவளோ காபி கொண்டு வர சென்றாள்.
”நம்ம நாச்சியாவா இது, இப்படி பார்க்க மாட்டாளே ஏன் இப்படி வில்லங்கமா பார்த்து