(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

அதற்கு சங்கமேஸ்வரனோ

  

”திருந்தியிருப்பேன் ஆனா நீ என்னை வாழ விட்டியா, நான் பாட்டுக்கு ஜெயில்ல நிம்மதியா  காலத்தை தள்ளியிருப்பேன் அப்புறம் என் காலமும் முடிஞ்சிருக்கும், நானும் திரும்பி வந்திருக்க மாட்டேன், அதை விட்டுட்டு ஜெயில்ல இருந்த என்னை கஷ்டப்படுத்தி நானே தற்கொலைக்கு தூண்டற மாதிரி செய்துட்டியே, இதனால என் ஆத்மா சாந்தியாகலை பேயா அலைஞ்சிக்கிட்டு இருக்கேன், மறுஜென்மம் கூட எனக்கு வராம நான் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா இதுக்கு எல்லாம் காரணம் நீதானே, உன்னை ஒருவழியாக்காம விடமாட்டேன்” என கர்ஜித்தான் அதற்கு ஆண்டாளோ

  

”உன்னாலதான் என்னோட ஆத்மாவும் சாந்தியடையாம சுத்திக்கிட்டு இருக்கு, என்னோட ஆசை நிறைவேறாம போகபோக நானும் ஒவ்வொரு பிறவியில பிறக்கற நாச்சியாவை தேடி வரவேண்டியதா போச்சி, இந்த பிறவியிலயாவது என் கடைசி ஆசை நிறைவேறனும் இல்லைன்னா மறுபடியும் நானே பிறந்து வருவேன், என்னிக்கு என் ஆசை நிறைவேறுதோ அன்னிக்குதான் எல்லாமே முடியும்”

  

”இன்னும் என்ன ஆசை உனக்கு, அதான் மேலவீதி கீழவீதி இரண்டும் ஒண்ணாக்கிட்டியே அம்பேத்கர் நகர்ன்னு பெயரும் வைச்சிட்ட போதாதா இனியும் என்னதான் வேணும் உனக்கு“

  

”இருக்கு சில உண்மைகள் உலகத்துக்கு தெரிஞ்சாகனும்”

  

“என்ன உண்மை”

  

”நான் எழுதின உயில்படி என்னோட மொத்த சொத்தும் மக்களுக்கு போகனும் ஆனா, அப்படி போகலை அதை தடுத்தது யாரு நீயா” என கேட்க சங்கமேஸ்வரன்

  

”ஆமாம் நான்தான், ஏன் மக்களுக்கு தந்த சொத்து போதாதா இருக்கறதையும் கொடுத்து அழிக்கனுமா அதான் நான் ஒரு முடிவு பண்ணேன், பேயா உலாத்தறதை விட எதையாவது செய்து பழிவாங்கனும்னு நினைச்சி இந்த கார்கோடகனுக்குள்ள நுழைஞ்சேன்” என சொல்ல உடனே நடுத்தர வயது நாச்சியா கார்கோடகனிடம்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.