(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”நாச்சியா அவளோட அழகை நான் அனுபவிக்கனும்னு ஆசைப்பட்டேன் ஆனா, அவளை நெருங்கறதுக்குள்ளயே அகத்தியனை கல்யாணம் செய்துக்கிட்டு உயர்வான இடத்துக்கு போயிட்டா, அதை என்னால தாங்க முடியலை எப்படியாவது அவளை அடைய திட்டமிட்டேன், எனக்கில்லாத அவளை யாருக்கும் தர பிடிக்கலை, அவளுக்கு வாரிசே பிறக்கக்கூடாதுன்னு அவளுக்கே தெரியாம கரு கலைப்பு விசத்தை தந்தேன், அதனாலயே அவளுக்கு குழந்தையில்லாம போயிடுச்சி”

  

”அடப்பாவி அது நீ செய்த வேலையா மனுஷனாடா நீ” என நடுத்தர வயது நாச்சியா கார்கோடகனை பார்த்து திட்ட அதற்கு கார்கோடகனோ

  

”திட்டிக்கோ வேற என்ன செய்ய முடியும் உன்னால“

  

”உன்னை இப்பவே கொல்லப்போறேன் பாரு” என அவள் அவனை கொல்ல வர அவனோ அவளை தடுத்து தள்ளிவிட்டான். அதைக் கண்டு வியந்த நாச்சியா, பாட்டி ஆண்டாளை பார்த்து

  

”எப்படி இதெல்லாம், இவ்ளோ பலசாலியா இவனால எப்படி இருக்கமுடியுது”

  

”தீராத ஆசையோட இறந்தா அவங்க பலம் அதிகமாகும்” என சங்கமேஸ்வரன் சொல்ல இளம்வயது நாச்சியாவோ

  

”போதும் நிறுத்துங்க என்னதான் நடக்குது இங்க, உங்க ஆசைகள் நிறைவேறாம போனதுக்காகவா இப்ப எங்க வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சி எங்களை கஷ்டப்படுத்தறீங்க, இது தப்பு இதோட நிறுத்திக்கலாம் எல்லாரும் போங்க இங்கிருந்து” என விரட்ட அதற்கு சங்கமேஸ்வரனோ

  

”அது முடியாது அந்த உயில் அழிக்கப்பட வேண்டியது, அதுக்காகதான் நான் திரும்பி வந்திருக்கேன், நான் அனுபவிக்காத அந்த சொத்து அங்க வாழற மக்களுக்கும் கிடைக்க கூடாது, அதெல்லாம் நாசமாதான் போகனும் அதுவரைக்கும் நான் ஓயமாட்டேன்” என கர்ஜித்தான் கூடவே கார்கோடகனோ

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.