”உன் குடும்பம் பற்றி எனக்கு நல்லாவே தெரியும் அதைப்பத்தி பெரிசா எதுவும் கேட்க தேவையில்லை எனக்கு தேவை உன்னைப்பத்திதான் அதுக்கு பதில் சொல்லு போதும் நீ என்ன படிச்சிருக்க”
“நான் பிஏ தமிழ் படிச்சிருக்கேன் தாத்தா”
“ஏன்மா அந்த படிப்பு எடுத்திருக்க உன் அப்பா பெரிய கார்மென்ட்ஸ் ஓனர் ஆச்சே தொழிலுக்கு ஏத்த படிப்பு படிச்சிருக்கலாமே”
“எனக்கு பிடிச்சத படிச்சேன் தாத்தா அதோட வேலைக்கு போறது ஆண்கள்தான் பெண்கள் வீட்லதான் இருக்கனும்னு என் வீட்ல சொல்வாங்க”
என அவள் சொன்னதும் தாத்தா ரிஷியை பார்த்தார்
”இப்ப ஏன் என்னை பார்க்கறீங்க தாத்தா”
“இல்லைடா நீ கேட்ட வீட்டோட இருக்கற பொண்ணு இதோ பாரு இதான் உனக்கு ஓகேவா”
“தாத்தா என் ஆத்திரத்தை கிளப்பாதீங்க ப்ளீஸ்” என கர்ஜித்தான். அவனைவிட்டு அவளை பார்த்தான்.
”வந்தனா இந்த வீட்ல நீ 1 மாசம் இருக்கனுமே நீ மட்டும் வந்திருக்க ஏன் உன் அப்பா அம்மா இல்லை உன் சொந்தக்காரங்கள்ல ஒருத்தர் கூடவா வரலை”
“இந்த போட்டியில ஜெயிச்ச பின்னாடி அவங்க வருவாங்க தாத்தா”
“அதுக்கில்லைம்மா நீ இங்க ஒரு மாசம் தங்கனும்ல அதான் தனியா இருப்பியா”
“எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இருக்க எனக்கு பழக்கம்தான் தாத்தா நான் இருந்துப்பேன் எனக்கு யாரோட துணையும் தேவையில்லை” என்றாள்.
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories