(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”ஏண்டி இப்படி தட்டற” என அவன் வேட்டியை வேண்டுமென்றே சரிசெய்ய அவளுக்கு பக்கென்றது

   

”வேலைக்கு போகாம என்ன செய்யறீங்க”

   

“ரெஸ்ட் எடுக்கறேன்”

   

“அப்ப வீடு எப்ப கட்டி முடிப்பீங்க”

   

“இரும்மா பொழுதுக்கும் வீடு கட்டிக்கிட்டே இருந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகறது அப்ப அப்ப ரெஸ்ட் எடுத்தாதான் எனர்ஜியா வேலை செய்ய முடியும் வா உள்ள வா” என சொல்லிவிட்டு அவன் நேராக பெட்ரூமுக்கு செல்ல சரண்யா அவசரமாக கதவை சாத்திவிட்டு தேவாவை தேடி பெட்ரூம் சென்றாள். 

   

அங்கு தேவாவோ கீர்த்தனாவின் பக்கத்தில் படுத்திருப்பதையும் அவளின் கோலத்தையும் கண்டவளுக்கு ஆத்திரமே வந்தது. இருந்தாலும் கோபத்தை காட்டி அவனிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்க பிடிக்காமல் தன் அறைக்குச் சென்று கோபமாக அமர்ந்துக் கொண்டாள்

   

”சரண்யா போயிட்டா” என அமைதியாக சொன்ன கீர்த்தனாவிடம்

   

”அவள் கோபமா போயிருக்கா இப்ப பாரு” என சொல்லி கீர்த்தனாவின் உடலில் சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தான். அவளும் சிரித்தாள். கூட சேர்ந்து தேவாவும் சிரிக்கவே அது சரண்யாவின் காதில் நாராசமாக விழுந்தது. இரண்டு கையையும் காதில் வைத்து அடைத்தவள் கண்கள் மூடி கோபத்துடன் உக்கிரமாக இருந்தாள்

   

”என்கூட ஒரு நாளாவது இப்படி  இருந்திருப்பாரா, சே இவர் மேல ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணதுக்கு கடைசி வரைக்கும் நான் இப்படி தனியாளாதான் இருக்கனுமா இல்லை இல்லை, அவர் அன்னிக்கு என்ன சொன்னாரு புது வீட்டுக்குப் போன பின்னாடிதான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.