(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“இந்த கோபம் கீர்த்தனா மேலயும் வருதா என்ன”

   

“அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவள் இருக்கறது கூட எனக்கு பிரச்சனையில்லை தேவா என்கூட என் கணவரா நடந்துக்கலை அதான் என் பிரச்சனை”

   

“சரிம்மா வா உன் தாத்தாகிட்ட பேசி முடிவு எடுக்கலாம், அவர் என்ன சொல்வாரோ தெரியலை”

   

“என்ன சொன்னாலும் சரி என் முடிவுதான் இறுதியான முடிவு” என சொல்ல கைலாசமும்

   

”சரி கிளம்பு” என சொல்ல உடனே தனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவளைத் தடுத்தான் தாஸ் அவன் ஏதோ சைகை செய்ய அதை சற்றும் கவனியாமல்

   

”போதும் உன்னாலாயாவது தேவா எனக்கு கிடைப்பார்ன்னு பார்த்தேன் ஆனா இல்லை வழியை விடு” என கத்தவும் தாஸ்க்கு ஒரு மாதிரியானது. அவன் விலகி தேவாவிடம் வர

   

”தேவையாடா உனக்கு அவளை பத்தி நான் சொன்னப்ப நீ நம்பல, இப்ப பாரு என்னாச்சின்னு” என சொல்ல தாஸ் வருந்தினான். கைலாசமோ தாஸிடம்

   

”தாஸ் நீயும் வாடா”

   

“முடியாது” என தலையாட்ட

   

”அட வாடா தனியா போறேன் நீயிருந்தா எனக்கு ஒரு துணையா இருக்கும், ஏதாவது பிரச்சனைன்னா என்னை கூட்டிட்டு வந்துடுவ வாடா” என சொல்ல அவனும் வேறுவழியில்லாமல் கைலாசத்துடன் சரண்யாவை அழைத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். 

   

சரண்யா சென்றதும் 2 நாள் வீடு கட்ட விடுமுறை அளித்த தேவாவோ நிம்மதியாக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.