விழுந்தேன், ஆனா நீ 6 மாசம் கூட ஆகலை இப்ப வந்து டைவர்ஸ் வேணும்னு கேட்டா என்ன அர்த்தம்” என தாத்தா ராஜமாணிக்கம் சரண்யாவிடம் கேட்க
”தாத்தா நானும் அவர் கூட வாழத்தான் ஆசைப்பட்டேன் ஆனா, அவர் என்னை மதிக்கலை, என்னை விரும்பலை, என்னை அந்நியமா பார்க்கறாரு, ஒரே வீட்ல அவங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கறத பார்க்க எனக்குப் பிடிக்கலை தாத்தா”
“எல்லாம் தெரிஞ்சிதானே நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட”
“ஆமாம் செஞ்சிக்கிட்டேன் காலம் போனா தானா மாறி என்னை ஏத்துக்குவாருன்னு அவருக்காக எல்லாமே செஞ்சேன் ஆனா, என்னாச்சி எதுவும் மாறலை அவர் அப்படியேதான் இருக்காரு. நான்தான் இப்படி ஆயிட்டேன். கேவலம் அந்த ஹாஸ்டல் கட்டற வேலைக்காகவே வீட்ல கெஸ்ட் போல வைச்சிருக்காரு. தனிமையா இருக்கறது எவ்ளோ கொடுமைன்னு உங்க ரெண்டு பேருக்கு என்ன தெரியும்” என கத்த பூபதி அவளது கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்
”அப்பா”
”இதையெல்லாம் நாங்க சொல்லியும் அன்னிக்கு கேட்காம அவன்தான் வேணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட, இப்ப டைவர்ஸ் வேணும்ங்கற நீ நினைச்சா எல்லாம் செய்யனும் அப்படித்தானே டைவர்ஸ் பண்ணிட்டு என்ன செய்யலாம்னு இருக்க, இப்படியே தனியாவே இருக்கப் போறியா”
“நான் பிசினஸ் பார்த்துக்குவேன்”
“என்ன பிசினஸ் அன்னிக்கே நான் சொல்லிட்டேன், மொத்த சொத்தும் என்னோடது. நான் நினைச்சா அதை யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாம் உனக்கு நையா பைசா இல்லைன்னு சொல்லி விரட்டிவிட்டேன், மறந்துட்டியா நீயா திருந்தி வீட்டுக்கு வருவேன்னு பார்த்தா திடீர்ன்னு ஒரு நாள் வந்து தேவாதான் வேணும் இல்லைன்னா நான் செத்துடுவேன்னு சொன்ன, யாரும் நம்பலை உடனே நீ தற்கொலைக்கு முயற்சி செஞ்ச