கையெழுத்து போடக்கூடாது போடாம இருந்தா சரண்யாவை தேவாகிட்ட விடுவேன், ஒருவேளை அவன் கையெழுத்து போட்டுட்டா என் பேத்தி சரண்யாவுக்கும் தேவாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதுக்கப்புறம் அவளுக்கு நான் கல்யாணம் செஞ்சி வைக்கப் போறேன். அதுவும் யாரோ இல்லை இதோ இங்க நிக்கற தாஸ் கூடதான்” என சொல்லவும் அனைவரும் அதிர்ந்தார்கள். அதில் தாஸோ சரண்யாவை முறைத்துவிட்டு தாத்தாவிடம்
”முடியாது” என பலமாக தலையாட்ட
”இந்த சொத்து மொத்தம் உனக்கு நான் தரேன்”
“வேணாம்” என அவன் தலையாட்ட சரண்யா வந்தாள்
”தாத்தா என்னால இவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது” என அவள் சொல்ல அவளை முறைத்தான் தாஸ்
”இவரை என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியாது” என பயந்து பயந்து சரண்யா பேச தாத்தாவோ
”அவ்ளோ பயம் இருக்கா இவன் மேல அப்ப இவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்”
“முடியாது தாத்தா” என அவள் கத்த அதற்கு மேல் தாஸ் முடியாது என தலையாட்டிவிட்டு கைலாசத்தை பிடித்து இழுக்க அவரோ நிப்பாட்டினார்
”இருடா பொறு அவர் என்ன சொல்ல வரார்ன்னு உனக்குப் புரியலையா சரண்யாவை சரி செய்யனும், அவளை இப்படியே விட்டா அவளோட இந்த குணத்தால தப்பான வழியில அவள் போயிடக்கூடாதுன்னு அவர் பார்க்கறாரு, யாருக்கும் பயப்படாதவ உனக்கு பயப்படறத அவர் பார்த்ததாலதான் இந்த முடிவுக்கு அவர் வந்திருக்காரு.
நீயும் எத்தனை நாளைக்கு இப்படியே தனியா இருப்ப, எப்படியும் நீ யாரையாவது கல்யாணம் பண்ணித்தானே ஆகனும் சரண்யாவை கல்யாணம் பண்ணிக்க” என சொல்ல