அப்படியெல்லாம் எங்களை டார்ச்சர் பண்ணி உன் காரியத்தை சாதிச்சும் உன்னால தேவாவை உன் வழிக்கு கொண்டு வர முடியலைன்னா தப்பு அவன் மேல இல்ல, தப்பு உன் மேலதான். உன்னோட பிடிவாதம், இந்தக் கோபம், ஆத்திரம் இதுதான் உன்னை இப்படியாக்கியிருக்கு
இப்ப உனக்கு டைவர்ஸ் வேணும்னா உன் புருஷன்கிட்ட கேளு, அவன் ரெடியா இருக்கான் கொடுக்கறதுக்கு அதுக்கப்புறம் எங்க போறதுன்னு நினைச்சி இங்க வந்து நிக்கறியா இதப்பாரு சரண்யா நான் சொன்னது சொன்னதுதான் உன்னால எவ்ளோ அவமானங்கள் இந்த குடும்பமும் தேவா குடும்பமும் படறது.
எல்லாமே விளையாட்டா இருக்குல்ல உனக்கு, உன் தாத்தா பெரிய ஆளு, அவரோட பதவி போனதுக்கு காரணம் நீதான். அதுக்காக அவர் கவலையேபடாம உன் ஒருத்தியோட விருப்பத்துக்காக தலை குனிந்து எல்லார் கால்லயும் விழுந்து உன் கல்யாணத்தை நடத்தி வைச்சாரு. அவர் செஞ்ச தியாகத்தை, நல்லதை நினைச்சி பாரு போ தேவா கூட வாழு போ இன்னிக்கு இல்லைன்னாலும் ஒருநாள் அவன் உன்னை ஏத்துக்குவான் போம்மா” என அவர் சொல்ல அவளோ
”இல்லைப்பா நீங்க சொல்றது எல்லாமே பொய், தாத்தா செஞ்சது தியாகம் இல்லை, மோசம் தன்னோட பதவி திரும்பக் கிடைக்கனும், என்னால இழந்த மதிப்பு, மரியாதையை பெறனும் அதுக்கு அந்த ஹாஸ்டல் கட்டினா கிடைக்கும்னு நினைச்சி எல்லாம் செஞ்சாரு. நான் தேவா கூட வாழலைன்னாலும் பரவாயில்லை ஆனா, அவருக்கு அவரோட பதவி, புகழ் கிடைச்சே ஆகனும் எவ்ளோ சுயநலவாதி” என சொல்ல தாத்தாவோ
”போதும் நீ பண்ண தப்பை நீதான் சரி செய்யனும் அதனாலதான் அமைதியா இருந்தேன் இப்ப என்ன வேணும் உனக்கு”
“டைவர்ஸ்”
”இந்த வீட்டு சொத்து ஒண்ணு கூட உனக்கு சேராது” என தாத்தா சொல்ல அதற்கு சரண்யா
“பரவாயில்லை எனக்கு இந்த சொத்து எதுவும் வேணாம்”