”வேணாம் தேவா பாவம் அந்த பொண்ணு”
“இப்ப என்ன செய்யச் சொல்றீங்க, என்னால அவளை ஏத்துக்க முடியாதுப்பா” என அவசரமாக அந்த பேப்பரில் கையெழுத்து போட்டுவிட தலையில் கையை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்து கண்கலங்கினான் தாஸ்.
அதைப் பார்த்த தேவாவோ
”நீ ஏண்டா கண்கலங்கற” என கேட்க அவனோ தேவாவை முறைக்கவே
”என்னடா என்னாச்சி” என கேட்க அவன் பதில் சொல்லாமல் எழுந்து
அந்த பேப்பரை பிடுங்கிக் கொண்டு வெளியே சென்றுவிட தேவா பதறினான்
”அப்பா என்னாச்சி அவனுக்கு”
“ம் என்னத்த சொல்றது விடு”
“அட என்னாச்சின்னு சொல்லுங்களேன்” என கத்த கீர்த்தனா வெளியே வந்து நின்றாள்.
”மாமா வாங்க மாமா உட்காருங்க, நான் போய் காபி கொண்டு வரேன்” என சொல்ல அவர் மறுத்தார்
”வேணாம்மா இப்ப காபி சாப்பிடற மூட்ல யாரும் இல்ல”
“அப்பா என்னாச்சி என்ன நடந்துச்சி அதைச் சொல்லுங்க”
என கேட்க கைலாசம் பொறுமையாக நடந்த்தைச் சொன்னார்.
”சரண்யா நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு, உனக்காக நான் எல்லார் கால்லயும்