(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“ஒரு பொண்டாட்டியா வேணாம் யாரோ ஒரு பொண்ணா கூட என்னை நினைச்சி என்கூட வாழலாமே”

   

“நான் அந்தளவுக்கு தரமில்லாதவன் கிடையாது. இத்தனை வருஷமா என் தனிமைக்கு நான் துணை தேடி போனதில்லை சரியா எனக்கு கீர்த்தனா போதும். அவள்ட்டயே அள்ள அள்ள குறையாத இன்பம் கிடைக்கறப்ப உன்கிட்டயோ இல்லை வேற ஏதோ ஒரு பொண்ணுகிட்டயோ நான் ஏன் போகனும், நான் என்ன முட்டாளா” என அவன் பேச அதற்குள் கீர்த்தனா தன் புடவையை கட்டி முடித்து சரண்யாவை பார்க்காமல் கிச்சனுக்குச் சென்றுவிட இப்போது சரண்யா மற்றும் தேவா மட்டுமே வாய்சண்டையில் இறங்கினார்கள். 

   

அவர்கள் பேசுவது கிச்சனுக்கே கேட்டதால் சரண்யா ஓய்ந்தபின் அறைக்குள் செல்வோம் என நினைத்தவள் எதற்கும் இருக்கட்டுமென தன் மாமனாருக்கு போன் செய்து இங்கு நடக்கும் சண்டையை சொல்லி அவரை வரவழைத்தாள்.

   

அதற்காகவே வீட்டு வாசக்கதவை திறந்து வைத்து தாஸையும் அழைத்தாள்

   

”அண்ணா உள்ள ஒரே சண்டை, நீங்க போய் என்ன ஏதுன்னு பாருங்க, நான் வீடு கட்டற வேலையை பார்க்கறேன்” என சொல்லி அவள் புதுவீடு கட்டும் இடத்திற்குச் செல்ல தாஸ் அரக்க பரக்க தேவாவை தேடி வந்தான். 

   

அவன் வந்த நேரம் சரண்யா தேவாவின் கழுத்தை பிடித்து நெறிக்க அவளது கழுத்தை இவன் நெறிக்க அய்யோ என தலையில் கையை வைத்து ரெண்டு பேரையும் பிரித்து வைத்தான் தாஸ், அதற்குள் அங்கு கைலாசம் வரவே புது பஞ்சாயத்து அந்த வீட்டில் ஆரம்பமானது. 

   

சரண்யா 6 மாதமாக தான் பட்டதாக நினைத்த கஷ்டங்களை வேதனைகளை சொல்லி முடித்தாள். தேவாவோ அவள் சொன்ன கஷ்டங்களுக்கு தனக்குண்டான பதிலை சொல்ல ரெண்டையுமே கேட்ட அவருக்கு தேவாவின் தரப்பே நியாயம் என படவே இறுதியில் கைலாசம் சரண்யாவிடம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.