(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

எல்லாம்னு சொன்னாரு 

   

ஆனா, இங்க என்னென்னவோ நடக்குது அதுவும் எனக்கு நடக்க மாட்டேங்குது, நான் கேட்பேன் அவர்கிட்டயே கேட்பேன். என்னை வெறும் ஹாஸ்டல் கட்டறதுக்கு மட்டும்தான் வீட்டுக்குள்ள வைச்சிருக்கார் போல, அது மட்டும் உண்மைன்னா அவரை டைவர்ஸ் பண்ணிட்டு என் ஊரை பார்த்து போயிடனும். 

   

இவர் இல்லைன்னா எனக்கு வேற ஆளா இல்லை அவரை லவ் பண்ணதே அவரோட ஒழுக்கமான நடவடிக்கைக்கும் அவரோட அழகுக்கும்தான் ஆனா, இப்படி என்னை வைச்சிக்கிட்டு இன்னொருத்தியோட சே,

   

என் மனசு எப்படி வேதனைப்படும்னு கூடவா அவர் நினைக்கலை. வேணும்னே செய்றாரா இல்லை நான் தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டாரா ம்ஹூம் நான் கேட்கத்தான் போறேன் அவள் கூட இருந்தா என் கூடவும் இருந்தே ஆகனும்” என ஒரு முடிவு எடுத்தவள் கண்களை திறந்து கோபமாக எழுந்து தேவாவின் அறைக்குச் சென்றாள். 

   

அங்கு தேவா கீர்த்தனாவின் இதழில் முத்தம் கொடுப்பதைக் கண்டு பொங்கி எழுந்தவள் அவனது தோளை உலுக்கி எழுப்பினாள்

   

”எழுங்க எழுங்க” என கத்த அவனும் எழுந்து அமர்ந்தான்

   

”அறிவில்லையா உனக்கு ரெண்டு பேர் சந்தோஷமா இருக்கறப்ப வந்து எழுப்பற, படிச்சவதானே நீ மேனர்ஸ் இல்லை உனக்கு”

   

“ஓ மேனர்ஸ் பத்தி நீங்க எனக்கு சொல்றீங்களா சே என்ன இது என்கிட்ட என்ன சொன்னீங்க, புது வீட்டுக்கு போனதும்தான் எல்லாம்னு சொல்லிட்டு இங்க இவளோட கொஞ்சிக்கிட்டு இருக்கீங்களா” என கோபமாக கத்த அவளது மனதில் இருந்த இத்தனை நாள் வேதனை, கோபத்தைக் கண்டு சிரித்தான் தேவா

   

”ஆமாம் சொன்னேன் நான் பெரிசா எதுவும் செய்யலையே வெறும் முத்தம்தான் கொடுத்தேன் போதுமா கிளம்பு போ”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.