(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் கிடையாது. சரி இத்தனை நாளா உன்கூட பழகினா ஏதாவது ஒரு ஃப்லீங் வரும்னு பார்த்தா என்னவோ தெரியலை உன் மேல மட்டும் எனக்கு எதுவுமே வரலை. அதனாலதான் உன்கிட்ட நான் வரலை. 

   

நான் உன்னை லவ் பண்ணலை, அதை நீ புரிஞ்சிக்கமாட்டேங்கற உன் பிடிவாதத்துக்கு என்னை பலிகொடுக்க நினைச்சா அது உன்னால முடியாது. கட்டாயப்படுத்தி உன்மேல காதலோ, மோகமோ எனக்கு வராது. இதே உனக்கு பிடிக்காதவன் உன் கையை பிடிச்சி இழுத்தா நீ சரிம்பியா, நம்ம விக்ரமை எடுத்துக்க அவன் உன் கையை பிடிக்கறான் உனக்கு ஓகேவா இல்லைல்ல அதுபோலதான் எனக்கும் என்னவோ உன்னை நான் அந்நியமாதான் பார்க்கறேன், பொண்டாட்டியா கூட உன்னை என்னால நினைக்க முடியலை. என்னை விட்டுடு எப்ப நீ ஹாஸ்டல் கட்டி முடிப்பேன்னு இருக்கு நீ கட்டி முடிச்சதும் என் வேலை முடியும்”

   

“என்ன வேலை அது”

   

“உன்னை பாத்துக்கற வேலை”

   

“ஓ அப்ப உங்க சுயநலத்துக்காகத்தான் என்னை இங்க நீங்க தங்க வைச்சிருக்கீங்க”

   

“தப்பு தப்பு எனக்கெதுக்கு அந்த ஹாஸ்டல் சொல்லு, உன் தாத்தாவுக்கு போன பதவி கிடைக்கனும், என் அப்பாக்கு ஹாஸ்டல் கட்டனும் அவ்ளோதான் 2 பேர் சொல்லி  இல்லைல்ல கெஞ்சினதாலதான் நான் அமைதியா இருக்கேன். இதுல உன் தேவை என் அப்பாவுக்கு கூட அவசியமில்லை 

   

ஆனா உன் தாத்தாவுக்கு இருக்கு உன்னால இழந்த தன்னுடைய பேர், மரியாதை, பதவி திரும்ப கிடைக்கனும்னா இந்த ஹாஸ்டல் முடிஞ்சாதான் உண்டுன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க, அப்பதான் நம்பிக்கை வரும்னு சொன்ன காரணத்தால உன் தாத்தா எனக்கு தந்த வேலை இது. வெறும் பாடிகார்டாதான் உன்கூட நான் பழகினேன் மத்தப்படி உன்னை என்னிக்குமே நான் நினைக்கலை ஆசைப்படலை”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.