(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

கீர்த்தனாவுடன் வாழ ஆரம்பித்தான். கீர்த்தனாவும் சரண்யா இருப்பதால் மனதில் சற்று பயத்துடனும் கவலையுடனும் தேவாவுடன் வாழ முடியாமல் தவித்தவளுக்கு சரண்யாவே தேவாவை வேண்டாம் டைவர்ஸ் என்றதும் புது உற்சாகம் வந்தது. 

   

அதில் அவளது காதல் முழுவதுமாக தேவாவிடம் காட்டி அவனை தனக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள். இத்தனை நாள் இல்லாத புது மாற்றம் கீர்த்தனாவிடம் ஏற்பட்டதற்கு காரணம் சரண்யா என நினைத்தவன் மனமாற சரண்யாவிற்கு நன்றி பாராட்டிவிட்டு கீர்த்தனா உடன் உல்லாசமாக நாட்களைக் கடத்தினான்.

   

2 நாட்கள் கழித்து.

   

தாஸ் ஊர் திரும்பினான். வரும் போதே கையில் பேப்பர்களுடன் வந்து சேர்ந்தான். தேவாவிடம் பேப்பர்களைக் காட்ட அவனோ அதை வாங்கிப் பார்த்தான், டைவர்ஸ் பேப்பர் என இருக்கவே சந்தோஷமாக அதில் கையெழுத்து போடப் போக தாஸ் தடுத்தான்

   

”வேண்டாம்” என தடுக்க

   

”ஏன்டா சரண்யா போனா போறா நிம்மதி நமக்கு” என சொல்ல தாஸ் உடனே 

   

”எனக்கு நிம்மதி போயிடும்” என சைகை செய்ய தேவா புரியாமல் விழித்தான்

   

”என்னாச்சி” என கேட்க பின்னாடியே வந்த கைலாசம் அவனிடம்

   

”நான் சொல்றேன்” என அவர் சொல்ல ஆரம்பித்தார்.

   

”சரண்யாவை கூட்டிட்டு அவள் தாத்தாகிட்ட போனோம். அங்க அவளோட அப்பாவும் இருந்தாரு. ரெண்டு பேருமே அவளை வீட்டுக்குள்ள சேர்த்துக்கலை தெரியுமா தேவா”

   

“வேணும் அவளுக்கு” என தேவா சொல்ல

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.