(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“சரி அதுக்கப்புறம் நீ என்ன செய்யலாம்னு இருக்க”

   

“படிச்சிருக்கேன் எங்கயாவது வேலைக்குப் போவேன்”

   

“ஓ அப்படியா உன்னோட படிப்பு உன் அப்பா பணத்தில நீ படிச்ச, வேலைக்கு போறதும் போகாததும் உன் விருப்பம், அதுக்கப்புறம் என்ன செய்வ இப்படியே தனியாவே வாழ்ந்துடப் போறியா”

   

”நான் ஏன் தனியா வாழனும், எனக்கு பிடிச்ச மாதிரி யாரையாவது பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்குவேன் கண்டிப்பா அது தேவா கிடையாது. அந்த தேவா மோசமானவன், என்கூடவும் பழகிட்டு என்னை ஏமாத்திட்டான்” என சொல்ல தாஸ் கோபத்தில் அவளின் முன்பு நின்று சைகை செய்ய அவள் அவனது கோபத்தில் சற்று பின் சென்று நிற்கவும் கைலாசம் வந்து தாஸை தடுத்தார்

   

”தாஸ் அமைதியாயிரு நீ சொல்றது அவளுக்குப் புரியாது” என அவர் சொல்ல தாஸ் அவரையே பார்த்துவிட்டு திரும்பி சரண்யாவை பார்த்தான். அவளிடம் சென்றவன் 

   

”நான் சொல்றது உனக்கு புரியலை” என சைகை செய்ய

   

”புரியுது ஆனா நான் தப்பு செய்யலை ஓகே ஒத்துக்கறேன் தேவா என் கூட பழகலை ஆனா, இந்த 6 மாசம் என்னை பார்த்தாரே, பழகலை, பேசலை அதையெல்லாம் தாண்டி அதே வீட்லதானே நானும் இருந்தேன் அப்ப என்ன அர்த்தம் புருஷனா அவர் கடமையை செய்யலை” என சொல்ல தாஸ் அவளையே ஏற இறங்கப்பார்த்துவிட்டு திரும்பி தாத்தா மற்றும் பூபதியை பார்த்து கைகூப்பி மன்னிப்பு கேட்க அவர்களோ

   

”எதுக்குப்பா மன்னிப்பு கேட்கற நீ என்ன தப்பு பண்ண” என தாத்தா கேட்க அவனோ சிரித்துவிட்டு திரும்பி சரண்யாவைப் பார்த்தான். 

   

அவன் கண்ணுக்கு திமிர் பிடித்த பிசாசு போல அவள் தெரியவும் சற்றும் யோசிக்காமல் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.