பின்னாடி நீங்க போங்க” என தாத்தா கைகூப்பி சொல்ல அவனோ முடியாது என மறுத்தான். கைலாசமோ
”எல்லாம் அவன் இருப்பான் நான் பார்த்துக்கறேன் இவனை, நீங்க நினைச்சதை செய்ங்க, சரண்யா ஓடிடப்போறா பத்திரம்” என சொல்ல தாத்தா சிரித்தார்
”பாடிகார்ட்ஸ்” என கத்த 2 பேர் ஓடி வந்தார்கள்“
”சரண்யா பத்திரம் அவள் கல்யாணம் ஆகற வரைக்கும் அவளை எங்கயும் விடக்கூடாது, ரூம்ல கொண்டு போய் அடைச்சி வைங்க இந்த முறை அவளுக்காக நீங்க ஏதாவது உதவி செஞ்சா அப்புறம் நடக்கறதே வேற” என சொல்ல அவர்களோ சரண்யாவிடம் வந்தார்கள்
”என்னையே அடைக்கப் போறீங்களா, என்கூட 10 வருஷமா இருந்தீங்க என் மேல பாசம் இல்லை, நான் பாவம் இல்லையா” என கேட்க அவர்களோ தாத்தாவைப் பார்க்க
”அவள் வாழ்க்கை நல்லாகனும்னு உங்களுக்கு இருந்தா நான் சொன்னதை செய்ங்க” என சொல்ல அதில் அவர்களும் சரண்யாவை இழுத்துக் கொண்டு அவளது அறையில் விட்டு கதவு ஜன்னல் அனைத்தையும் அடைத்துவிட்டு அறைக்கு வெளியே காவல் புரிந்தார்கள்.
தாஸோ கைலாசத்திடம் கெஞ்சிக் கேட்டும் கோபமாகக் கேட்டும் கடைசியில் பிச்சை கூட எடுத்து விட்டான். அவரோ
”இதப்பாரு தேவாவை சரண்யா எவ்ளோ டார்ச்சர் பண்ணியிருப்பா, உனக்கு தேவாவை பிடிக்கும் அவனுக்காக இவளை கல்யாணம் பண்ணிக்க இல்லைன்னா, தேவாவையும் வாழ விடமாட்டாள், அவனை தொல்லை பண்ணிக்கிட்டே இருப்பாள் முக்கியமா உன் தங்கச்சி கீர்த்தனா வாழ்க்கையை யோசிச்சி பாரு, அவள் வாழ்க்கை இவளால பலியாகனுமா, கீர்த்தனாவுக்காக இவளை நீ கல்யாணம் பண்ணிக்க” என அவர் சொல்லவும் தாஸ் குழம்பினான். இருவரும் தங்குவதற்கு அறையை காட்டினார் தாத்தா.
தாஸ் எங்கும் செல்லாமல் இருப்பதற்கு அவனுக்கும் பாடிகார்டுகளை நியமித்தார். தாஸோ வேறு ஏதோ சிந்தனையில் மூழ்கினான்.