(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”ஆமாம் இப்ப நீ கையெழுத்து போட்டதால அந்த சரண்யாவை தாஸ் கல்யாணம் பண்ணியே ஆகனும்”

   

“அய்யோ பாவம்”

   

“ஆமாம் தாஸை நினைச்சா பாவமாதான் இருக்கு”

   

“நான் தாஸை சொல்லலை, சரண்யாவை சொன்னேன். தாஸ் என்னை போல இல்லையே, அவனுக்குன்னு ஒண்ணு கிடைச்சா அதை விடமாட்டானே பாருங்க, என் நிழலை விட்டு எங்கயாவது போயிருக்கானா அது போலதான் சரண்யா மட்டும் அவனுக்கு பொண்டாட்டியானா அவ்ளோதான் முடிஞ்சது சரண்யாவோட கதை இது தெரியுமா தெரியாதா அவளுக்கு”

   

“அவள் ஏதோ குருட்டு நம்பிக்கையில இருந்துட்டா போல, எப்படியாவது தாஸை விரட்டிடலாம்னு நினைச்சிருப்பா” என கைலாசம் சொல்ல தேவா சிரித்தான்

   

”எப்ப கல்யாணம்”

   

“வர்ற வெள்ளி”

   

“இன்னும் 2 நாள்தான் இருக்கு”

   

“இந்த ஊர்ல கல்யாணம் ஆனதால இந்த ஊர் கோர்ட்லதான் டைவர்ஸ் கிடைக்குமாம் அது கிடைக்க 2 நாள் ஆகுமாம்”

   

”எப்படிப்பா 6 மாசம் கூட ஆகலை எப்படி டைவர்ஸ் தருவாங்க 1 வருஷம் ஆனாதானே”

   

“சரண்யாவோட தாத்தா ராஜமாணிக்கத்துக்கிட்ட நிறைய பணம் இருக்கு புரியுதா, இந்த விசயத்தில சட்டத்தை விலைகொடுத்து வாங்கிட்டாரு பணம் விளையாடியிருக்கு”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.