“எப்படியோ அவள் என்னை விட்டா அதுவே போதும்”
“ஆனா தாஸ்”
”அவனைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க அந்த சரண்யாதான் பாவம், அவளோட மொத்த திமிரையும் அவன் ஒருத்தனே அடக்கிடுவான் பாருங்க”
“என்னவோ ஆனா ஒண்ணு தேவா, அவளை கல்யாணம் பண்ணதால நம்மளை விட தாஸ்தான் பெரிய கோடீஸ்வரன் ஆகப்போறான்”
“இருக்கட்டுமே இத்தனை வருஷமும் ஒண்ணுமில்லாம இருந்தான், என் நிழலையே சுத்தி சுத்தி வந்தான். அவனுக்கும் ஒரு நல்லது செய்யனும்னு இருந்தேன். இப்ப அதுவா வந்திருக்கு, அவன் நல்லவன் அவனுக்கு இப்படித்தான் நல்லது நடக்கும்”
”சரிடா கிளம்பு கோர்ட்டுக்குப் போலாம்”
“சரண்யா வந்தாளா”
“வந்திருக்கா என் வீட்ல தங்கியிருக்காங்க அவளும் அவள் அப்பா தாத்தாவும்”
“சரி நீங்க முன்னாடி போங்க நான் நேரா கோர்ட்டுக்கு வந்துடறேன் தாஸ் எங்க?”
“கோபமா வெளிய நிக்கறான்”
“சரி நீங்க போங்க நான் அவனை கூட்டிட்டு வரேன்” என சொல்ல அவரும் சென்றதும் தாஸை தேடி தேவா வெளிய வந்தான். அவனோ கையில் பத்திரத்தை வைத்துக் கொண்டே வாழ்க்கையே சூனியமானதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு இருந்தான். அவனிடம் வந்த தேவா
”வாழ்த்துக்கள் உனக்கு கல்யாணமாமே சொல்லவேயில்லை” என கிண்டலாகச் சொல்ல