தாஸோ அவரிடம் சைகை செய்ய அவரோ சரித்தார் அதற்கு சரண்யாவோ
”என்ன சொல்றாரு”
“உன்னை கல்யாணம் பண்றதுக்கு சந்நியாஸியாவோ இல்லை குளத்துலயோ குதிக்கலாமாம் நீ அவனுக்கு வேணாமாம் உன்னை ரிஜக்ட் பண்ணிட்டான்” என கைலாசம் சொல்ல அவளுக்கு அவமானமாகி விட்டது
”பார்த்தியா சரண்யா கடைசியில உன் நிலைமை, அவனுக்கு கூட உன்னை பிடிக்கலை இந்த லட்சணத்தில நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறியா தாராளமா, நீ பார்ப்ப அவன் சரியா வரலைன்னா உடனே டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொருத்தனை பார்ப்ப, அவனும் சரியில்லைன்னா உடனே ஆளை மாத்துவ நான் உன்னை பாரினுக்கு அனுப்பினது படிக்கத்தான், அங்க இருக்கற மாதிரி இங்க வாழறதுக்கு இல்லை தேவா, உன்னை டைவர்ஸ் பண்றான்னா அது நியாயம் நான் ஒத்துக்கறேன் ஏன்னா அவன் உன்னை விரும்பலை ஆனா, அதுக்காக உன்னை இப்படியே நான் விடமாட்டேன்” என தாத்தா சொல்ல அதற்கு சரண்யா
“ஆனா தாத்தா என்னால இவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது”
“ஓ அப்படியா உன் விருப்பத்தைகேட்டு இத்தனை நாளும் உனக்காக நாங்க எல்லாரும் நடந்துக்கிட்டோம். இப்ப நான் சொல்றதை நீ செஞ்சித்தான் ஆகனும், தாஸைத்தான் கல்யாணம் பண்ணி வைப்பேன், உனக்கு பிடிக்கலைன்னா நீ தாரளமா டைவர்ஸ் பண்ணிடு, யார் வேணாம்னு சொன்னா ஆனா இந்தச் சொத்து முழுக்க தாஸ்க்கு எழுதி வைக்கப்போறேன் அது நிச்சயம், நாளைக்கு காலையில டைவர்ஸ் பேப்பரும் ரெடியாயிடும் சொத்துக்கான பேப்பரும் ரெடியாயிடும்” என சொல்லியவர் தாஸிடம்
”மாப்பிள்ளை” என அழைக்க அவன் மிரண்டான்.
”சரி சரி கல்யாணம் ஆன பின்னாடியே கூப்பிடறேன் நாளைக்கு வரைக்கும் நீங்க இரண்டுபேரும் இங்க தங்கியிருங்க, அதுக்கப்புறம் நீங்க போகலாம் பேப்பர்கள் வந்த