(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

விடிந்தது. 

   

தாத்தா இரவோடு இரவாக வக்கீலை வைத்து இரு பத்திரங்களை தயாரித்தார். ஒன்று டைவர்ஸ், இன்னொன்று சொத்துப்பத்திரம். ஹாலில் அனைவரும் ஆஜரானார்கள். தாத்தா டைவர்ஸ் பேப்பரை சரண்யாவிடம் காட்டினார்

   

”நீ தேவாகூட வாழறேன்னு சொன்னா இதுல கையெழுத்து போட வேணாம், இப்பவே தேவா கிட்ட போ இல்லை அவன் கூட வாழ முடியாதுன்னு சொன்னா கையெழுத்து போடு, தாஸை கல்யாணம் பண்ணிக்க”

   

“தாத்தா இது அநியாயம் என்னால தாஸ் கூட” என அவள் சொல்லி முடிக்கும் முன்பே தாஸ் உறும அவள் சற்று தடுமாறி

   

”நான் இவர் கூட வாழ மாட்டேன்” என மெதுவாகச் சொல்ல தாத்தா சிரித்தார்.

   

”அப்படியா அப்ப சரி அப்ப வாழ்க்கை முழுக்க நீ உன் ரூம்லயேதான் அடைபட்டு இருக்கனும், இதே வீட்ல உனக்கு எல்லாமே கிடைக்கும், சொத்து கிடைக்காது. நான் போன பின்னாடி உன் அப்பா அவன் போன பின்னாடி தாஸ்க்கு சேரும் புரியுதா” என சொல்ல 

   

”தாத்தா என்னை விட்டுடுங்க நான் வெளியே போய் பிழைச்சிக்குவேன்” என சரண்யா கெஞ்ச

   

“உன்னால நடந்த பிரச்சனைகள் போதாதா ஏற்கனவே நீ செஞ்ச தப்பால என்னோட மானம், மரியாதை, பதவி போச்சி, தேவா வீட்லயும் நிறைய பிரச்சனைகள், உன்னை வெளிய விட்டா இன்னும் ஏதாவது செஞ்சி வைப்ப, இப்படியே நீ செய்ற காரியத்துக்கு உன்னால மத்தவங்க பலியாகனுமா ஒழுங்கா தாஸை கல்யாணம் பண்ணிக்க அதான் ஒரே வழி” என சொல்லிவிட்டு பேப்பரை நீட்ட அவளோ தேவாவையும் தாஸையும் நினைத்துப் பார்த்தாள். தேவா செய்த செயல்கள் அவள் மனதை ரணமாக்கின அவள் யோசித்தாள்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.