(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தாஸ் முறைத்தான்

   

”இதப்பாரு என் பொண்டாட்டியை எப்படி நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கறியா? அவளை நான் பொண்டாட்டியாவே பார்க்கலை, அவளை நான் தொடவே இல்லை, என்னை நம்பு சத்தியமா நம்புடா” என சொல்ல அவனோ தலையில் அடித்துக் கொண்டு

   

”உன்னை யார் அவளை தொடவேணாம்னு சொன்னா இப்ப பாரு என் நிலைமையை” என அவன் சைகையில் சொல்ல

   

”தாஸ் இந்த நிலைமைக்கு காரணம் நான் இல்லை, உன் வருங்கால பொண்டாட்டி சரண்யாதான், உன் கோபத்தை அவள் மேல காட்டு, அவளாதானே வந்தா, அவளே பிரச்சனை பண்ணி என்னை கல்யாணம் பண்ணா இதுல என் தப்பு எங்கடா இருக்கு” என சொல்ல

   

”உன்னை யார் அவசரமாக கையெழுத்து போடச் சொன்னது” என சைகையில் கேட்க

   

அவனோ சிரித்தான்

   

”நடந்த உண்மையை சொன்ன பின்னாடியும் நான் கையெழுத்துப் போட்டிருப்பேன், எனக்கு சரண்யா வேணாம், எனக்கு கீர்த்தனா போதும், அவள்தான் என் உலகம், உன் தங்கச்சிக்கு துரோகம் செஞ்சவ சரண்யா, அவளை நீ பார்த்துக்க விட்டா அவள் கீர்த்தனாவை எதையாவது செஞ்சிடுவா அவ்ளோ கோபத்தோடத்தான் அவள் போயிருக்கா” என ஏத்திவிட தாஸ் குழம்பி பயங்கரமாகச் சிந்தித்தான். அவனது சிந்தனையை இன்னும் அதிகமாக்க நினைத்து அவனுடன் பேசியபடியே கோர்ட்டுக்குச் சென்றான்.

   

அங்கு இரு குடும்ப உறுப்பினர்களும் இருந்தார்கள். தேவாவை யாரும் தடுக்கவில்லை அதுவே பெரிய விந்தையாகப்பட்டது தாஸ்க்கு. எப்படியோ 2 மணி நேரத்தில் டைவர்ஸ் கிடைத்து விட்டது. நிம்மதியாக கார் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த தாஸிடம் வந்தான் தேவா

   

”விடுதலை கிடைச்சிடுச்சி” என்றான் சந்தோஷமாக. அவனது சந்தோஷத்தைக் கண்ட 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.