(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”தாஸை கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரச்சனை தீர்ந்துடும் அதுக்கப்புறம் தாஸ் என் கூட வாழ மாட்டான், டைவர்ஸ் வாங்கிட்டு பாரின் போயிடலாம் நம்ம அக்கவுண்ட்ல பணம் இருக்கு அது போதும்” என நினைத்தவள் அந்த பேப்பரில் கையெழுத்து போட்டு நீட்ட அதை வாங்கி தாஸிடம் தந்தார்

   

”இந்தாப்பா இது உன் வாழ்க்கை பிரச்சனை, இதுல தேவா கையெழுத்து போடலைன்னா நீ தப்பிச்ச, கையெழுத்து போட்டா நீ சரண்யாவை கல்யாணம் பண்ணித்தான் ஆகனும்” என சொல்ல அவனோ தேவாவின் மீதான அபார நம்பிக்கையில் பேப்பரை வாங்கி வைத்துக் கொண்டான். 

   

அடுத்து தாத்தா சொத்து பத்திரம் எடுக்க தாஸ் தடுத்தான் வேண்டாம் என சைகையில் சொன்னான்

   

”கல்யாணம் ஆனாலும் ஆகலைன்னாலும் இந்த சொத்து உனக்குதான்” என சொல்ல அவனோ மறுத்தான் 

   

அவன் செய்த சைகை புரியாமல் கைலாசத்தை பார்க்க

   

”அவனுக்கு சொத்து வேணாமாம், அவனாலயே சுயமா வேலையை செஞ்சி குடும்பத்தை ஓட்ட முடியும்ங்கறான்”

   

என சொல்ல சரண்யாவுக்கு கசப்பாக இருந்தது. ஆனால் தாத்தாவோ அதை மெச்சிக் கொண்டார்

   

”சரிப்பா சரி உன் விருப்பம் இப்ப நீ கிளம்பலாம்” என சொல்ல விட்டால் போதுமென கைலாசத்துடன் கிளம்பி சென்னையை விட்டு மதுரை வந்து சேர்ந்தான். அவர்கள் சென்ற பின் பூபதியும் தாத்தாவும் தன்னுடைய லாயருடன் மதுரை வந்து சேர்ந்தார்கள்.

   

”இவ்ளோ நடந்திருக்கா” என தேவா கைலாசத்திடம் கேட்க

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.