(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

   

விக்கிராந்திற்கு ஏற்ற மனைவி அவளில்லை...

   

அவனின் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளும் அவளில்லை...

   

எப்படியாவது அவனின் மனதை மாற்ற வேண்டும்.... 

   

நினைக்கும் போதே அவளின் இதயத்தில் நறுக்கென்று கூரான வலி ஏற்பட்டது!

   

🌼🌸❀✿🌷

   

பக்கத்து க்யூபில் இருந்து விசில் சத்தம் வரவும் டைப் அடித்துக் கொண்டிருந்த ஈமெயிலை விட்டு விட்டு எட்டிப் பார்த்தாள் ஜான்வி.

   

“என்னடா விக்கி, விசில் எல்லாம் தூள் பறக்குது? இன்னைக்கு வந்த மெசேஜ் பார்த்து டல்லா இருப்பேன்னு நினைச்சேன். அதை ஓவர்கம் செய்ற அளவுக்கு, என்ன விசேஷம்?"

   

"நத்திங் ஸ்பெஷல் ஜானு," என்ற விக்கிராந்தின் முகம் என்னவோ ஜாக்பாட் பெற்றவனைப் போல மலர்ந்து மின்னிக் கொண்டிருந்தது!

   

நண்பனை கூர்ந்து பார்த்த ஜான்வி, "அப்படியா? என்னவோ விஷயம் இருக்க மாதிரி எனக்கு தோணுதே?" என்றாள்!

   

அதற்கு விக்கிராந்த் பதில் சொல்ல வாய் அசைத்த நேரத்தில், சரவணின், "ஹேய் ஃப்ரெண்ட்ஸ்! ஹப்பாடியோ உங்க இரண்டு பேரையும் ஒன்னா பிடிச்சிட்டேன்," என்ற ஆரவாரமான குரல் கேட்டது!

   

விக்கிராந்த், ஜான்வி இருவருமே அவன் பக்கம் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்!

   

"டேய் சரோ, நீ என்னடா செய்ற இங்கே? இதுக்கு நீ லீவை கேன்சல் செய்துட்டு ஆஃபிசே 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.