தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 06 - சசிரேகா
ஈஸ்வரனோ தனது கடையில் எதையோ பறிகொடுத்தவன் போலவே இருந்தான், அதைக்கண்ட மூர்த்தியோ
”டேய் இப்ப என்னாச்சின்னு சோகமா இருக்க, வியாபாரத்தில லாபம் நஷ்டம் வர்றது சகஜம்தானே“
”அதுக்கில்லைப்பா நம்ம கிட்ட நம்பிக்கையா ஆர்டர் கொடுக்க வந்தவங்க, திடீர்ன்னு மனசு மாறி இன்னொரு கடைக்குப் போனா அப்ப நம்ம கடையில ஏதோ குறையிருக்குன்னுதானே அர்த்தம்”
”நீ ஏன் அப்படி நினைக்கற, யாரோட பேச்சோ கேட்டு அப்படி அவங்க மாறியிருக்கலாம், விடு வேற ஆர்டர் கிடைக்கும்”
”இப்படியே நான் விட்டா அப்புறம் கஸ்டமர்களே கிடைக்க மாட்டாங்கப்பா, எனக்கென்னவோ நம்ம கடையி
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா இது வேடிக்கையா இருக்கு, திடீர்ன்னு என்ன உனக்கு பணம் சம்பாதிக்கற எண்ணம் வந்துடுச்சி, நீ இது போல பணத்து மேல ஆசைப்படறவன் கிடையாதே”
”காலம் மாறும் போது நாமளும் மாறனும்பா, பணத்துமேல எனக்கு ஆசையில்லைதான், அதுக்காக பணத்தை சம்பாதிக்காம இருக்க முடியுமா நாளைக்கே பணத்தேவை வந்தா என்ன செய்றது”
”நாளைக்கேவா அப்படி என்ன வந்துடப் போகுது”