“ஹீரோ சார், நான் சொன்னது மாடிப் படியில இருந்து ரைட் சைட்ல இருக்க முதல் ரூம்... என்னவோ என்னை இழுக்குதேன்னு செகண்ட் ரூம் போயிடாதீங்க...”
உதய் என்ன என்பது போல் பார்த்தான்...
“அங்கே தான் உங்க ஹீரோயின் இருக்காங்க...”
“அண்ணி... நீங்க ரொம்ப மோசம்...”
வேகமாக மாடி ஏறியவன்... அங்கே வெளியே யாரும் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டு ஈரத்தினால் பிசுபிசுத்த சட்டையை கழட்டினான்... அப்படியே பனியனையும் கழட்டியவன்... முதல் அறையை கவனிக்காமல் கடந்து இரண்டாவது அறையிடம் சென்றான்...
❀✿❀✿❀✿
நந்திதா மனதினுள் பலவிதமான மகிழ்ச்சி பூக்கள் பூத்திருந்தன...
அவளுடைய புது வேலையில் கிடைத்த முதல் வெற்றி என்பது மட்டுமில்லாமல், உதயுடன் அன்று முழுவதும் பேசிய பல விஷயங்களும் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது.
எதை எதையோ யோசித்தப்படி நைட்டிக்கு மாறியவள், கதவருகில் கேட்ட சத்தத்தை வைத்து துளசி வந்திருப்பதாக நினைத்துக் கொண்டாள்...
அவளிடம் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றதே...
அவசரமாக சென்று கதவை திறந்து, “துளசி...” என்றவள், அங்கே உதய் சட்டை இல்லாமல் வெற்று மார்புடன் நிற்பதை பார்த்து திகைத்து நின்றாள்...!
கதவருகே நின்றிருந்த உதயும் திகைத்து தான் போயிருந்தான்...