“அவருக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை?"
சிவந்திருந்த நந்துவின் முகத்தை நோட்டம் விட்ட படி, "எவருக்கு?" என்றாள் துளசி கேலி மின்ன!
“அவர் தான் உதய்...”
“ஏன் கேட்குற?”
“சும்மா...”
“உதய்க்கு இப்போ தான் அவங்க அம்மா அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க... அன்னைக்கு வீட்டுக்கு வந்தது கூட அதை பத்தி பேச தான்... அவங்க ஒரு பொண்ணு செலக்ட் செய்து வச்சிருக்காங்க...”
“ஓ!”
“ஏன் நந்து, உதய் நம்ம ஜூனியர் தானே, அப்புறம் என்ன அவர் இவர்ன்னு மரியாதை கொடுத்து பேசுற? ஏதோ ஆஃபிஸ்ல உனக்கு மேல இருக்க டெசிக்னேஷன்ல இருக்கான், சரி... என் கிட்ட பேசும் போதும் அப்படி மரியாதை எல்லாம கொடுக்கனுமா என்ன?”
“இந்த மரியாதை அவருடைய வயசுக்காக இல்லைப்பா... அவர் அச்சீவ் செய்திருக்கும் விஷயங்களுக்காக... அவருடைய பண்புகளுக்காக...”
“உனக்கே இது புரிஞ்சிருக்குறதுல எனக்கு சந்தோஷம்...”
“எது?”
“மரியாதை என்பது வயசை பொறுத்ததில்லைன்னு...! உதய் கேரக்டர் ஓகே... அச்சீவ்மென்ட்???