(Reading time: 8 - 15 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

திறந்திருந்த கதவின் வழியே உள்ளே அறையில் இருந்த குப்பை குளம் ரோஷனியின் கண்ணில் நன்றாகவே பட்டது! ஆனால் அதையும் தாண்டி மேஜை ஒன்றின் மீது வைக்கப் பட்டிருந்த சுமித்ராவின் படம் அவளின் கவனத்தை கவர்ந்தது! அந்த ஃபோட்டோ பளிச்சென்று சுத்தமாக இருந்தது. ஃபோட்டோவி மேல் எக்ஸ்ட்ராவாக பூ, பொட்டு எதுவும் இல்லை. படுக்கை, மேஜை நாற்காலி என எல்லாமே அந்த ஃபோட்டோ இருந்த இடத்தை சுற்றி தான் இருந்தது! அறை முழுக்க இருந்த குப்பை எதுவுமே அந்த ஒரு இடத்தில் மட்டும் இல்லை!

   

இது எல்லாமே ஒன்றிரண்டு நொடியில் ரோஷனியின் கவனத்தில் பட்டது! அதற்கு மேல் அவள் அமைதியாக நிற்க வழி இல்லாது, “என்ன?” என மீண்டும் வினவினான் கமல்.

  

அவன் பொதுப்படையாக கேட்டாலும் அவன் கேட்பது ரேஷ்மி பற்றி என்று ரோஷனிக்கு தோன்றியது!

   

அதற்கு மேல் தாமதிக்காமல் வந்த விஷயத்தை அவனிடம் ஒப்பித்தாள்.

  

அவள் சொல்வதை எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டு கேட்டுக் கொண்ட கமல், “எவ்ளோ பணம் தேவைப்படும்?” என்றான்!

   

“முப்பது லட்சமாவது ஆகும்னு தோணுது! நீங்க வேணா அவங்க கிட்ட பேசி பார்க்குறீங்களா?”

   

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “இருபது இருபத்தி அஞ்சு லட்சம் நான் புரட்டி தரேன், மீதியை பார்த்துக்க முடியுமா?” என்றான் கமல்!

   

சரியென தலை அசைத்து விட்டு, மீண்டும், “கவிதா கல்யாண விஷயம், நீங்களும் பேசி பார்த்து முடிவு செய்யலாமே?” என்றாள் ரோஷனி.

   

தலையை மறுப்பாக அசைத்ததற்கு மேல் கமல் வேறு ஒன்றும் சொல்லவில்லை!

   

ஆனால், ஒரே வாரத்தில் சொன்ன பணத்தை தயார் செய்து செக்காக ரோஷனியிடம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.