சம்பாதிக்கிறான் என்பது அவளுக்கு தெரியும்...
ஆனால் அப்படி சம்பாதிப்பது எதற்காக? ஏன் செய்கிறான்???
ஒரு நாளுமே அவன் ரேஷ்மியுடனோ, வேறு யாருடனோ நேரம் செலவிட்டு பேசியதில்லை... பாசத்தை பகிர்ந்ததில்லை...
விமலையும், பூங்கோதையையும் பொறுத்த வரை அது தான் கமலின் சுபாவம்...
ரோஷனியால் அதை சரி என்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இல்லை என்றும் மறுக்க முடியவில்லை!
அது என்னவோ கமல் மட்டும் வருடக் கணக்கில் அவள் மனதில் நெருடிக் கொண்டிருக்கும் விடை தெரியாத புதிராகவே எப்போதும் இருந்தான்!
✽✽✽
மாலை மூன்றரை மணி...
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தன்னுடைய i10ஐ பார்க் செய்து விட்டு கட்டிடத்தினுள் நடந்தான் ஷ்யாம்...
அவனும் அந்த கல்லூரியின் பழைய மாணவன் தான்...
மனதில் அலை மோதிய கல்லூரி நினைவுகளுடன் நடந்தவன், திடீரென யாரோ அவனின் கையை பிடித்து இழுப்பதாக உணர்ந்து திகைத்துப் போனான்! அனிச்சை செயலாக தன் கையை இழுத்துக் கொள்ள முயன்றான்....
“டேய்... நான் தான்... கையை இழுக்காதே...”
ரேஷ்மியின் குரல் கேட்டு தன் கையை சட்டென ஃப்ரீயாக விட்டவன் அவள் இழுத்த