(Reading time: 8 - 15 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

கொடுத்தான் கமல்!

   

கவிதாவின் கல்யாணம் அமோகமாக நடந்தது! கமல் பெயருக்கு தலை காட்டி விட்டு சென்றான்!

   

கமல் கொடுத்த பணத்தினால் திருமணம் நடந்திருந்தாலும், அவனுக்கு தங்கை மேல் அன்பில்லை, பொறுப்பை தட்டிக் கழிக்கிறான் இத்தியாதி இத்தியாதி என பல பேச்சுக்கள் வந்தது!

   

ரோஷனிக்கே அவன் கவிதாவின் கல்யாணத்தில் பெரிதாக அக்கறை காட்டாதது பிடிக்கவில்லை தான்!

   

ஆனால் அதற்கு பிறகும், எத்தனையோ தடவை தேவை உணர்ந்து ஒரு வார்த்தையும் சொல்லாமல் உதவி இருக்கிறான் கமல்! 

    

ரோஷனியின் மகன் அபிலாஷ் எஞ்சினயரிங் படிக்கவும் கமல் தான் பணம் கொடுத்து உதவினான்... 

   

அபிலாஷிற்கு அட்மிஷன் கிடைத்த சமயத்தில் விமல் வேறு காரணங்களால் பண நெருக்கடியில் இருந்தான்...

   

வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் தான் ரோஷனி கமலிடம் உதவி கேட்டாள்....

   

ஏன், என்ன, என்று கேட்டு குடையாமல் தன் மகளுக்கு கொடுப்பதை போலவே ரோஷ்னி தயக்கத்துடன் கேட்ட உதவிக்கும் உடனேயே வாரி வழங்கி உதவி இருந்தான்...

   

மற்றவர்களுக்கு கமலின் பாராமுகமும், ஓருவருக்கும் மரியாதை கொடுக்காமல் நடந்துக் கொள்ளும் விதமும் மட்டுமே பெரிதாக தெரிந்தால், ரோஷ்னிக்கு கமலின் உதவி செய்யும் மனப்பான்மை பெரிதாக தெரிந்தது!

   

கமல் இரண்டு, மூன்று வேலை என்று எடுத்து செய்து, நேரம் பார்க்காமல் உழைத்து, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.