இழுப்பிற்கு சென்று காலியாக இருந்த அந்த வகுப்பறையில் அவள் முன் நின்றான்...
“ஹப்பப்பா... என்ன ஒரு நினைப்பு உனக்கு...! என்னவோ பெரிய ஹீரோ மாதிரி கையை தடுக்குற....??? அவ்வளோ தைரியம் வந்திருச்சா உனக்கு...?”
துடுக்குத்தனத்துடன் ஒலித்த ரேஷ்மியின் பேச்சை ரசித்த ஷ்யாம்,
“அப்படியில்லை சில்க்... ஆள் அரவமில்லாம இருந்துச்சா... பேய் ஏதாவது வந்திருக்கோம்னு நினைச்சேன்... உன் குரல் கேட்டிச்சோ இல்லையோ அந்த பயம் ஓடி போயிடுச்சு... நீ இருக்கும் போது பேயாவது, பிசாசாவது,” என்றான் விழிகளை உருட்டிக் கொண்டே!
“ஹ்ம்ம்... ரொம்ப பேசுறீயே....! உன்னை லவ் செய்தது தப்போ....???”
“ஹப்பாடியோ!!!! இப்போவாவது உனக்கு அறிவு வந்துச்சே... சந்தோஷம்!!!!! ஆளை விடு சாமி... நான் எஸ்கேப்...”
ரேஷ்மி பதில் சொல்லாமல் கைகளை மடித்து இடுப்பில் வைத்த படி நின்று ஷ்யாமை பார்த்து முறைத்தாள்...
“ஹேய் சில்க்... கோபமா???” என்றான் ஷ்யாம் கொஞ்சும் குரலில்!
“கோபமா!!!??? எனக்கு ஒரு மண்ணும் இல்லை... நீ போ... போய் ஜாலியா எஸ்கேப் ஆகிக்கோ,” என்றாள் ரேஷ்மி கோபத்துடன்!
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா....”
ரேஷ்மி இப்போதும் அவனை முறைத்தப் படியே நின்றாள்...
“கம் ஆன்... ரேஷ்மி, என்னை பத்தி உனக்கு தெரியாதா??? இதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்????”