(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

நந்திதா ரேவதியை நேராகப் பார்த்தாள்.

   

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்தது...

   

அன்று நடந்ததை பற்றி பேச வேண்டுமா என்று ரேவதி யோசிக்க, அன்று அப்படி பேசியவர்கள் தானா இன்று இப்படி பேசுவது என்று நந்திதா ஆச்சர்யப் பட்டுக் கொண்டிருந்தாள்!!!

   

முதலில் யோசனையில் இருந்து வெளி வந்த ரேவதி,

   

“நான் கிளம்புறேன்,” என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள்.

   

அவள் சென்ற பின்பும் நந்திதா யோசனையுடன் அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள்!

   

ஒரு சில நிமிடங்கள் கழித்து அவளை தேடி அங்கே வந்த துளசி, நந்திதாவின் அருகே அமர்ந்தப் படி,

   

“என்னடி சிலையா மாறிட்டீயா???? அவங்க போய் பத்து நிமிஷம் மேல ஆச்சு அசையாம உட்கார்ந்திருக்க??? என்ன விஷயம்???” என வினவினாள்!

   

“ம்ம்ம்...” என்றதற்கு மேல் நந்திதா எதுவும் சொல்லவில்லை!

   

“உன் காதுல ரத்தம் வரலை, குட்...! என்ன மிரட்டிட்டு போறாங்களா???”

   

“ப்ச் அதெல்லாம் இல்லை ஒசிமம்...”

   

“அப்புறம்???”

   

“பேசினாங்க...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.