“ஐயோ இப்போ வேண்டாம் அண்ணி... அம்மா கிட்ட அப்புறம் பேசுறேன்...”
“ஹீரோ சார்... மம்மி கிட்ட இல்லை உங்க ஹீரோயின் கூட பேசுறீங்களான்னு கேட்குறேன்...”
“யூ ஆர் தி பெஸ்ட் அண்ணி இன் திஸ் வொர்ல்ட்!”
“சரி சரி, ஃபோனை கொடுன்னு நேராவே சொல்லி இருக்கலாம்... இரு அவக் கிட்ட கொடுக்குறேன்...”
நந்திதாவிடம் துளசி ஃபோனை நீட்ட, அவள் வேண்டாம் என கை அசைத்து சொன்னாள்...
ஃபோன் ஸ்பீக்கரை கையால் மூடி விட்டு, நந்திதாவை மிரட்டினாள் துளசி.
“ஓவரா பந்தா செய்த அவ்வளவு தான்... உன்னை கூட லவ் செய்து ஒரு ஜீவன் அம்மாவை எல்லாம் தாஜா செஞ்சு கல்யாணம் பேச அனுப்பி வச்சிருக்கு... ஒரு தேங்க்ஸ் சொன்னால் என்ன? குறைஞ்சா போற?”
“இல்லை துளசி... இப்போ வேண்டாம்...”
“வாயை மூடு... நொண்டி சமாதானம் சொல்றதை விட்டுட்டு அவன் கிட்ட பேசு...”
“என்ன பேச சொல்ற...”
“ஹாங்! எதாவது சொல்லிடுவேன்... உன் இம்சை தாங்க முடியலைடி நந்து... உனக்கா பேச தெரியாது? நிறைய அறுவை ஜோக் வச்சிருப்பீயே அதுல இருந்து ஒன்னு இரண்டை எடுத்து விடு... இல்லைனா சிச்சுவேஷன் பாட்டு பாடு...”
“ஹேய்...!”