(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“பேசினாங்களா!!! ஹேய், அடி வாங்க போற! பேச தான் இரண்டு பேரும் இங்கே மீட் செய்தீங்கன்னு எனக்கும் தெரியும்... என்ன பேசினீங்க?”

   

“என்னவோ பேசினோம்....”

   

“நந்து, மண்டையிலேயே போடுவேன்...”

   

“ஒசிமம்... ப்ளேட் போடுறதை விட்டுட்டு கிளம்புறீயா????”

   

“கிர்ர்ர்ர்ர்... அடியே நீ தானே பயமா இருக்குன்னு என்னை கூட துணைக்கு வான்னு சொன்னவ???”

   

“ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன், அதுக்காக கூடவே வந்து இப்படி மொக்கை போடுவீயா???”

   

“அடி பாவி... உன்னை,” என்று துளசி பேசிக் கொண்டிருந்த போது அவளின் செல்ஃபோன் ஓசை எழுப்பியது!

   

எடுத்துப் பார்த்த துளசி,

   

“உன் ஆளு தான்... ஏதோ போனா போகுதுன்னு இங்கே நடந்த அதிசயத்தை ஃபோன் செய்து அவன்ட்ட சொன்னா, நீங்க ரெண்டுப் பெரும் பேசி முடிச்சாச்சா, முடிச்சாச்சான்னு கேட்டே நாலு தடவை ஃபோன் செய்துட்டான்,” என்று நந்திதாவிடம் சொல்லி, அவள் முகம் மாறுவதை ரசித்தப் படி, உதயின் அழைப்பை ஏற்று பேசினாள்!

   

“என்னப்பா உதய், என்ன வேணும் உனக்கு???”

   

“அப்புறம் என்ன ஆச்சு அண்ணி??? இரண்டு பேரும் பேசி முடிச்சிட்டாங்களா?”

   

“பேசி முடிச்சிட்டாங்க... நீ பேசுறீயா???”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.