(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 29 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ன்னப்பா ஷ்யாம் இவ்வளவு கம்மியா எடுத்திருக்க? ரேஷ்மி அவருக்கு இடியாப்பம் எடுத்துக் கொடு,”

   

“இன்னும் கொஞ்சம் தேங்கா பாலும் எடுத்துக்கோங்க,”

   

பூங்கோதை, கவிதா, ரோஷனி மூன்று பேரும் புதிய மணமக்களை, அதிலும் குறிப்பாக, ஷ்யாமை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள்!

   

அவர்களின் அன்பை மறுக்க முடியாமல், அவனின் தட்டை நிறைத்திருந்த உணவுகளை முடிக்கவும் முடியாமல், ஷ்யாம் திணறிக் கொண்டிருக்க... அதை ரகசியமாக பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மி!

   

கடிகாரத்தை பார்த்த ரோஷனி,

   

“மணி பத்தாச்சு, அதிசயமா இன்னும் உங்க அப்பாவை காணுமே, ஆச்சர்யமா இருக்கு,” என்றவள், காலி தட்டுடன் ஷ்யாமை பார்த்து சிரித்த படி அமர்ந்திருந்த ரேஷ்மியிடம்,

   

“ஷ்யாம் பொறுமையா சாப்பிட்டு முடிக்கட்டும், நீ போய் உன் அப்பாவை எழுப்பி சாப்பிட கூப்பிடு ரேஷூ,” என்றாள்.

   

“நானா?”

   

ரேஷ்மியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ரோஷனி ஒரு பார்வை பார்க்க,

   

“சரி சரி, போறேன் சித்தி,” என்று அலுப்புடன் சொல்லி விட்டு, ஷ்யாமிடம் கண்களால் விடை பெற்று, மாடி ஏறி சென்றாள் ரேஷ்மி.

   

இரண்டாவது மாடியை அடைந்தப் போது அவளுள் பழைய இனிய நினைவுகளும், கசக்கும் அந்நியத் தன்மையும் சேர்ந்தே எழுந்தது!

   

2 comments

  • Hi Sis, when will you update the next episode am eagerly waiting for a long time, want to know what kamal dairy explains, pls update the episode, my request

    • Hi Sis! 🤗 Thank you so much for your excitement! The next two episodes are already up. Hope you enjoy them! Can't wait to hear your thoughts. 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.