ஆனாலும் அவனின் மனம் அவனிடம் புது புது கேள்விகளை கேட்க தான் செய்தது...
யார் இந்த சரண்யா? எதற்காக அவளுக்காக இவ்வளவு யோசிக்கிறான்?
அவள் எப்படி போனால் அவனுக்கு என்ன வந்தது?
சரண்யாவிற்கு உதவினால் அவனுக்கு எப்படி மன அமைதி கிடைக்க முடியும்????
எல்லாமே பகுத்தறிவான கேள்விகள் தான்...!
வேண்டுமென்றே அதை பற்றி யோசிக்காமல் உதாசீனப் படுத்தி ஒதுக்கி வைப்பதையே வாடிக்கையாக்கி வைத்திருந்தான் மித்ரன்...
ட்ரைவர் வாசலுக்கு பக்கத்தில் காரை நிறுத்தியதும், இறங்கி தன் வழக்கமான வேக நடையுடன் வீட்டுக்குள் நடந்தவன்,
“யூ ஆர் அ ப்யூட்டிஃபுல் கேஸில்,” என்ற ஒரு இனிய மழலைக் குரல் கேட்கவும், யார் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் நின்று திரும்பி பார்த்தான்!
லிவிங் ரூமில் ஃப்ரீயாக இருந்த கார்பெட் தரையில் ஒரு சிறுமி ப்ளாக்ஸ் வைத்து அழகான ஒரு அரண்மனையை உருவாக்கி இருந்தாள்! இப்போது அதை ரசிப்பதுப் போல அழகுப் பார்த்துக் கொண்டிருந்தாள்! சற்று முன் பேசியது அவளாக தான இருக்க வேண்டும்!
ஆர்வம் அதிகமாக, “ஹாய்,” என்றான் மித்ரன்!
தன் அரண்மனையை விட்டு பார்வையை திருப்பி அவனை பார்த்தவளின் முகத்தில் கேள்வி வந்தது. தன் இரண்டு கைகளையும் மடித்து இடுப்பில் வைத்துக் கொண்டு,
“வூ ஆர் யூ???” என்றுக் கேட்டாள் தோரணையாக!