(Reading time: 7 - 14 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

எல்லாம் கூட பிடிக்கும்...”

   

“சூப்பர் செல்லம்... உனக்கு ஒன்னு தெரியுமா? நான் சின்ன பையனா இருந்தப்போ நானும் எப்போவும் உன்னை மாதிரியே தான் எதையாவது பில்ட் செய்துட்டே இருப்பேன்!”

   

“நிஜமா?”

   

அவள் விழிகளை விரித்து மழலையாக கேட்க, அந்த அழகில் மயங்கி அவளை கையில் தூக்கிக் கொண்டான் மித்ரன்.

   

“நிஜமா! என் கிட்ட நிறைய lego டாய்ஸ் இருக்கு... உனக்கு பிடிச்ச மத்த டாய்ஸ் எல்லாமும் கூட இருக்கு... உனக்கு வேணுமா?”

   

நிஷாவின் கண்களில் ஆர்வம் எட்டிப் பார்த்தது. ஆனால் ஆம் என்று சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

   

“வரீயா, நான் என்னோட டாய்ஸ் எல்லாம் உனக்கு எடுத்து தரேன்?”

   

“அப்படிலாம் யார் கூடவும் போக கூடாது, எதுவும் வாங்க கூடாதுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க...”

   

இந்த காலத்திற்கு தேவையான அறிவுரை தான் என மனதில் நினைத்துக் கொண்ட மித்ரனுக்கு, சரண்யா எப்படி நிஷாவை தனியாக இங்கே விளையாட விட்டாள் என்ற கேள்வி வந்தது...

   

பொதுவாக சரண்யா வீட்டில் இருக்கும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிஷா கண்ணிலேயே பட மாட்டாள்...

   

“அம்மா எங்க செல்லம்? நீ இங்கே தனியா இருக்க?” என நிஷாவிடமே மனதில் வந்த சந்தேகத்தை கேட்டான் மித்ரன்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.