(Reading time: 7 - 14 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

அவனை அப்படி அழைக்க சொல்லி அவன் சொல்லவில்லை... அவளாகவே உரிமை எடுத்துக் கொண்டிருந்தாள்!

   

அதிசயத்திலும் அதிசயமாக அது மித்ரனுக்கு கோபத்தை கொடுக்கவில்லை, மாறாக சந்தோஷத்தை கொடுத்தது.

   

அது ஏன் என்பது அவனுக்கு புரியவில்லை...!

   

ஏற்கனவே சரண்யா பற்றிய கேள்விகளே நிறைய இருந்தன... அதன் கூட பதில் தெரியாத கேள்வியாக இதையும் சேர்த்துக் கொண்டிருந்தான்!

   

“ஹேய் நிஷா செல்லம், என்ன செய்றீங்க?” என மித்ரன் கேட்கவும், தன் ப்ளாக்ஸை காண்பித்து,

   

“மால் பில்ட் செய்றேன் மித்ரன்,” என்றாள் நிஷா.

   

“வாவ்! நிஷா பேபியோட மால் சூப்பரா இருக்கே. எத்தனை மாடி இருக்கு இந்த மால்ல?”

   

“ட்வென்டி ஒன்!”

   

“ஹப்பாடியோ! ட்வென்ட்டி ஒன்னா?”

   

“ம்ம்ம்..... இது பெரிய்யயயயயயயயயய மால்...”

   

வாயால் சொன்னதை கைகளில் செய்கையாகவும் அவள் காட்ட, மித்ரனுக்கு சிரிப்பு வந்தது

   

“ரொம்ப பெரிய மால் தான்! ஆமா, நிஷா பேபிக்கு எப்போவும் ப்ளாக்ஸ் விளையாட தான் பிடிக்குமா?”

   

“ஆமா... ரொம்ப பிடிக்கும்... அப்புறம் பிரின்சஸ், டோரா, மிக்கி மவுஸ், மினியன், கலரிங் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.